ஆல் இஸ் வெல்
Followers
Followers
Thursday, 22 June 2017
பெண்.....
புதிதாக கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்.!இன்று யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர். அன்றே கணவனுடைய அம்மா, அப்பா வந்தனர் இருவரும் அவர்கள் வருவதை பார்த்தனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை…!
ஆனால் அக்ரிமெண்ட் போட்டது நினைவுக்கு வந்தது. அதனால் கதவை திறக்க வில்லை அவன். அவர்கள் யாரும் இல்லை என்று நினைத்து போய் விட்டனர்.
கொஞ்ச நேரம் கழித்து மனைவியின் அம்மா, அப்பா வந்தனர் கதவை தட்டினார்கள். இருவரும்ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆனால் மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது. என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது என்று சொல்லி கதவை திறந்தாள். ஆனால் கணவன் ஒன்றும் சொல்ல வில்லை. வருடங்கள் உருண்டோடின….!
இரண்டு ஆண் குழந்தை பிறந்தது. மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. கணவன் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பெரிய அளவில் செலவு செய்து அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான். அதற்கு மனைவி இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடவில்லை. ஏன் பெண் குழந்தை பிறந்தவுடன் இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்க என்று கேட்டாள் … ?
அதற்கு கணவன் ரொம்ப நிதானமாக ஏனெனில் பிற்காலத்தில் எனக்காக கதவை திறக்க ஒரு பெண் பிறந்துவிட்டாள் என்றான் கர்வத்துடன்….!!!
👉.

Wednesday, 21 June 2017
கவலை
🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .
குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.
குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது
" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,
எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,
மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.
கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.
குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.
🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

Tuesday, 20 June 2017
மனிதம்
இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.
அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.
பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,
“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”
கணவனும் பார்த்தான்.
ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.
தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,
“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?
இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...
இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”
கணவன் அமைதியாகச் சொன்னான்,
“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”
இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.
ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.
ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.
அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...
#இன்றையசூழ்நிலையில்............
மனிதம் என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது;
. . (படித்ததில் பிடித்தது)

Friday, 16 June 2017
பாஸிடிவ் திங்கிங்
Think positive
Be happy,,,,🤷♂🤷♂🤷♂
ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்:🤕🤕
சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை.
நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது.😚
அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement.😩😩😩
அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார்.😭😭😭
அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத முடியவில்லை. காரும் பயங்கர சேதாரம்.🤒🤒😷🤕
என்ன ஒரு மோசமான வருடம்,,, என்று வருத்தத்துடன் எழுதி முடித்தார்.🤧🤧
அவருடைய மனைவி அப்போதுதான் உள்ளே வந்தார். கணவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து பின்னால் இருந்து அவர் எழுதியதை படித்தார்.✍
பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு பேப்பரில் எதையோ எழுதி, கொண்டு வந்து, கணவர் எழுதிய பேப்பருக்கு அருகில் வைத்தார்.✍✍✍
சென்ற வருடம் gall bladder operation.நீண்ட நாட்களாக இருந்த வலியிலிருந்து விடுதலை பெற்றேன்.🙌
60 வயது ஆனதால் வேலையிலிருந்து ரிடையர்மெண்ட். இனி என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடுவேன்.👍👍
என் அப்பா 95 வயதில் யாருக்கும் இனியும் பாரம் வேண்டாம் என்று அமைதியாக இறைவனிடத்தில் தஞ்சம் புகுந்தார்.👍👍
அதே வருடம் என் மகன் கடவுள் கருணையால் மீண்டும் புது வாழ்வு கிடைத்தது. என்னுடைய கார் சேதாரமானாலும் என் மகன் எந்த குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான்🤷♂🤷♂
இந்த வருடம் எனக்கு நல்ல வருடம்.கடவுள் என் மீது தன் கருணையை பொழிந்தார்.☺☺
படித்த கணவர் நன்றி பெருக்கால் தன் மனைவியை அணைத்துக் கொண்டார்.☺
என்ன அற்புதமான மனதிற்கு வவிவூட்டும் வாக்கியங்கள்.☺☺☺☺
ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது நமது கையில்தான் உள்ளது.☺☺

Wednesday, 7 June 2017
முக்கியம்
வேலைக்கு போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் .. நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? அதைப் போய் ஆயாகிட்ட கொடுப்பாங்களா..? நம்ம வீட்டு பீரோல இருக்குற நகை, பணம் எல்லாம் ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? ஷ்ஷு.... அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது... உங்க ATM கார்டை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? என்ன கேள்வி இது..? நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது... " அப்போ ஏம்மா என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? " இம்முறை அம்மாவிடமிருந்து பதில் இல்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது...!
படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது
Wednesday, 24 May 2017
சில. வேண்டும்கள்
இன்றைய தேடல்
உள்ளம் கணக்கும் போது உறுதுணையாக உள்ளம் வேண்டும்.....
அழுது புலம்பும் போது ஆறுதல் கூறும் அன்பு வேண்டும்....
உயர பறக்கும் போது நூலின் நன்றி மறவாது இருக்க வேண்டும்.....
உதவி எண்ணும் போது அன்புடையேர் கண்ணேல்லம் காண வேண்டும்.....
கொடுப்பவர் பணம் காண மனம் காணும் உள்ளம் வேண்டும்.....
இல்லாமை அழிந்திட வேண்டும்.....
வறுமை ஒழிந்திட வேண்டும்.....

Subscribe to:
Posts (Atom)