Followers

Followers

Sunday, 7 August 2016

சிரிங்க..சிரிங்க..சிரிச்சிகிட்டே இருங்க...!!!

தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர்.
அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது.
அவரையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது. மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது.
மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது. வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப்போய் விட்டது.
இவருக்கோ குழப்பம். எதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது. இங்கே எதற்காக வந்தது?
எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்துஅலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது. வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.
மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள்.
மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய். அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது. மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை.
இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒருநாள் ஒரு துண்டு சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார். மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில் வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது. படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அப்படி என்ன தான் எழுதியிருந்தது?
" அன்பு மிக்கவருக்கு
வணக்கம். இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது. தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி.
இப்படிக்கு
...................
பி.கு.
ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா? நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன.

Thursday, 4 August 2016

என்னம்மா இப்பூடி பண்றிங்களேம்மா


ஒரு பொண்ணு டெய்லி காலெஜுலெர்ந்து வரும்போது ஒருத்தன்
பின்னாடியே வரதக் கவனிச்சுச்சு ...
வீட்டுக்குள்ள போயி மூஞ்சி கழுவி ட்ரஸ்
மாத்திக்கிட்டு வந்து பாத்தா அவன்
அங்கேயே நின்னுக்கிட்டு செல்போன
நோண்டிக்கிட்டு இருக்கான்....
ஒருவாரம் ஆயிருச்சு.... தினமும்
அதே கதை தான்.

பொண்ணு யோசிச்சது " அம்மாப்பாட்டச்
சொல்லிறலாமா?"
"இல்ல இன்னும் கொஞ்சம் பொறுத்துப்
பாப்போம்..."
ஒரு மாசம் தாண்டிருச்சு... கதை ரிப்பீட்டு...
ஒரு நண்பியக் கூட்டிக்கிட்டு வந்து அவனக்
காமிச்சுக் கதை சொல்லிச்சு அந்தப் பெண்...
பிரெண்டு " மூணு மாசம் வரைக்கும் பாரு...
பையன் நல்லா இருக்கான்.... வீட்டுல சொல்லிக்
கலியாணத்துக்கு ஏற்பாடு பண்ணிரலாம்"
ன்னு சொல்லிச்சு...

பெண்ணு மனசுக்குள்ள
ஒரு கிளுகிளுப்பு ஓட ஆரம்பிச்சிருச்சு....
நண்பியோடு கூடச் சேர்ந்து அவன் வேலை,
குடும்ப விபரம் எல்லாம்
கண்டு பிடிச்சு முடிச்ச போது ஒரு வருஷம்
தாண்டிருச்சு....
அப்பாம்மாட்டச் சொல்லிருச்சு.... அவங்களும்
கலியாணம் பேசி முடிச்சிரலான்னு
சொல்லி ஊர்லேர்ந்து பெரியவங்களக்
கூட்டிட்டு வந்து மொறைப் படி வரன் கேக்கப்
போக ரெடியானாங்க....

சந்தோசம் தாங்காமப் பொண்ணு அன்னைக்குச்
காலைல கோயில் போயிட்டு வரும்போது
அவன் கிட்டப் போயி
"ஒரு வருஷத்துக்கு மேலா என்ன
பாலோ பண்ணுறீங்க...
சின்சியரா வீட்டு முன்னாடி நின்னு பாக்குறீங்க....
ஆனாலும் ஒரு தப்புத் தண்டாவான
விஷயமெல்லாம் பண்ணலை.... அதுனால நான்
வீட்டுல சொல்லி, உங்க வீட்டுல சம்பந்த பேச
நாளைக்கு என்னோட அப்பாம்மா வராங்க... உங்க
வீட்டுல எந்தத் தடையும் சொல்ல
மாட்டாங்கன்னும் கண்டு பிடிச்சிட்டேன்.... ஐ
லவ் யூ டா கண்ணா" ன்னுச்சு...

அவன் அதுக்கு
"அடாடா... நான் உங்க
வீட்டுவாசல்ல உங்களுக்காகக்
காத்து நிக்கலை...உங்க வீட்டு WI-FI ல நீங்க
பாஸ் வேர்டு போடலை... அதுனால
ப்ரீயா டவுன்லோடு பண்ணத்தான் வரேன்..."
ன்னு சொல்லிட்டு எடுத்தான் பாருங்க ஓட்டம்...

என்னம்மா...... இப்படி பண்றீங்களேமா....🏃🏃🏃🏃🏃


Friday, 29 July 2016

யாரோட போனு......


👬நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம் அப்போது அருகில் ஒருவர் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்பீக்கர் ஆனில் இருந்த்தால் மறுமுனையில் பேசிய அவர் 👩மனைவியின் குரல் தெளிவாக கேட்டது.

"ஏங்க…நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. 📷டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... 💰இருபதாயிரம்தான் விலை.
வாங்கிகட்டுமா...?"

"வாங்கிக்க...!"☺

"அப்புறம்... நான் கேட்டேனே ஒரு
💎வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான் 💰ஒண்ணரை லட்சம் சொல்றான்..."

"ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...😊!"

“அப்புறம் ஒரு புடவை 💁 பார்த்தேன் ரொம்ப காஸ்ட்லியா சொல்றான்”

“ரேட்ட பார்க்காதேமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா 😏”

"ஏங்க... அப்புறம் நாம பார்த்தமே ஒரு கார் 🚘... இப்ப ஆஃபர் போட்டிருக்காங்க... விலை 💰பதினெட்டு லட்சம் சொல்லறான்... உங்க செக் இருக்கு குடுத்துறவா..?"

"ஓகேமா…… இதுலாம் கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும ்😇 "

"ஓகேங்க... சீக்கிரம் விட்டுக்கு வாங்கன்னு ..." என்று கொஞ்சலாய்ச் சொல்லிவிட்டு மறுமுனையில் ஃபோனை வைத்தாள் மனைவி.

இவரும் ஃபோனைச் சிரித்தபடியே வைத்துவிட்டுத் திரும்பினார்.

ஒரே நாளில் இவ்வளவு பர்ச்சேஸா... நாங்கள் மிரண்டு போய்ப் 😳 பார்த்துகொண்டிருக்க, எங்களை பார்த்து சிரித்தபடியே 😆 கேட்டாரே ஒரு கேள்வி….

"யாரோட மொபைல்ங்க 📱 இது..?".
் 😝😝😜😛😛😛😜😝😝



Wednesday, 20 July 2016

தொற நைனா

கணினி  கட்டளைகள்  சென்னை  தமிழில்

 save----------வச்சிக்க.....

save  as  -------ஐயே.... அப்படியே  வச்சிக்க.....

save  all-------அல்லாத்தியும்  வச்சிக்க.....

find---------தேடு...

ĺind  again------இன்னொருதபா தேடு

Undo------
ஜகாவாங்கு..

Zoom------பெரிசா

காட்டு    

Open------தொற   நைனா    

 
Replace------இத்ததூக்கி அப்பாலிகா போடு அத்த தூக்கி இப்பாலிக்காபோடு        

Paste------  ஒட்டு    

Paste  spcial   -----   நல்லா  எச்சில் தொட்டு ஒட்டு   ...


Drag-------நல்லாங்காட்டி  இஸ்துக்க

Do you  wand  to  delete  selected item   ------
மெய்யாலுமே தூக்கிடவா    

Access  denied-----

கை வீச்சா  கீசிடுவன்...

Monday, 11 July 2016

பையன் :- அப்பா நான் கல்யாணம் பண்ண போறன்.
அப்பா :- முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- எதற்கு?
அப்பா :- மன்னிப்பு கேள்
பையன் :- எதற்கு? நான் என்ன செய்தேன்?
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- ஏன்? என்ன தவறு செய்தேன்?
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- அதான் எதற்கு?
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- தயவுசெய்து எதற்காக னு சொல்லுங்க பீளிஸ்
அப்பா :- நீ முதல்ல மன்னிப்பு கேள்
பையன் :- சரி ப்பா என்ன மன்னித்துவிடுங்கள் .
அப்பா :- நீ இப்ப தயார் ஆயிட்ட ,
உனக்கான பயிற்சி முடிந்தது !
காரணமே இல்லாம மன்னிப்பு கேட்க்க கத்துக்கிட்டினா ‪#‎நீ_கல்யாணம்_பண்ணலாம்_மகனே



சம்பளம் உயர்த்திக் கேட்ட வேலையாளுக்கு, BOSS வைத்த TEST..!!
BOSS: நீ FLIGHT - லபோய்கிட்டு இருக்க.. அதுல 50 செங்கல் இருக்கு.. அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா, மீதி எவ்ளோ இருக்கும்..??
வேலையாள்: 49 இருக்கும்..!!
BOSS: ஒரு யானையை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..??
வேலையாள்: ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!!
BOSS: ஒரு மானை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..??
வேலையாள்: ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய வெளிய எடுக்கனும், மானை உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!!
BOSS: அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள்..!! எல்லா விலங்குகளும் வந்துடுச்சு..!! ஒன்னு மட்டும் வரல, அது என்ன..??
வேலையாள்: மான், ஏன்னா.. அது ஃப்ரிட்ஜுக்குள்ள இருக்கு..!!
BOSS: முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும்.. என்ன பண்ணுவாங்க..??
வேலையாள்: தாரளமா கடக்கலாம்.. எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு..!!
BOSS: ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க, எப்படி..??
வேலையாள்: குளத்தில் மூழ்கிட்டாங்க..!!
BOSS: அதான் இல்ல, முதல்ல FLIGHT - ல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டேல.. அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு..!!
இப்படி கவனம் இல்லாம தான் நீ வேலை பார்த்துட்டு இருக்க.. இதுல உனக்கு சம்பளம் வேற கூட கேக்குற..!!
ஒழுங்கா கவனமா வேலைய பார்.. இல்லன்னா சீட்டு கிழிச்சிரும்..!!
நீதி: கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பருப்பும் வேகாது..!!

Sent from my Samsung

Friday, 24 June 2016

நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா. அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.
அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி. அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார். அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர். விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார்.அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்..சிந்திக்கவும் வைப்பார். அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார். ஆனந்தத்தில் மிதக்க வைப்பார். அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார்.
நாட்கள் விரைந்தது . நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. அம்மாவுக்கு இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை.அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை. அப்பா அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார். நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.
எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார்.அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார். சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும் தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல் தினந்தோறும் கூறி வந்தார். செக்ஸ் பற்றி கூச்சமில்லாமல் எல்லோர் முன்னிலையிலும் அவரால் பேச முடிகிறது. எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது .நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது.
எனது தாய் தந்தையர் பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார். நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை .நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை.
இப்போது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம். இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்.நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.அப்படி யார் அவர்?அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்? அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள். கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது. இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.................... ............................ .................... ............
...................... ................................ ................................ ............................... ...................
சொல்கிறேன் கேளுங்கள்.அவரை நாங்கள் "டிவி" என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது. அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.அவருடைய மனைவியின் பெயர் "கம்ப்யூட்டர்". இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் கைபேசி. இப்போது சொல்லுங்கள் இவர்களை எப்படி வெளியே அனுப்புவது?