Followers

Followers

Friday, 20 January 2017

கேள்வி..


கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!

**.) கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி

**.) கில்லெட் ரேசரில் சவரம் செய்து

**.) ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும் லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து

**.) ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு

**.) ஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும்

**.) பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு

**.) மேகி நூடுல்சை சாப்பிட்டு,
நெஸ்கபே காபியை குடித்துவிட்டு

**.) ரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு,

**.) சாம்சங் போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
ரேபான் கண்ணாடியையை அணிந்து,

**.) வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,

**.) ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி

**.) மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு

**.) மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,

**.) குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்..

"இந்தியன் ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சின்னு???"

**கேட்டான் பார் ஒரு கேள்வி**

நன்றி

யாரோ....



Thursday, 19 January 2017

காலம் மாறிப்போச்சு



காலம் மாறாமல் மாற்றியது நம்மை..........
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும்
ஊரே அமர்ந்து பார்த்தோம்.
**
ஞாயிற்றுக்கிழமை மாநிலமொழி
திரைப்படம் தமிழில் போடமாட்டார்களா
என ஏங்கி கிடந்தோம்.
**
திங்கள்கிழமை பள்ளியில் அமர்ந்து
கொண்டு ஞாயிறன்று பார்த்த
படத்தைப்பற்றி விவாதம் செய்தோம்.
**
தாத்தவையும் பாட்டியையும் ஸ்கூல்
லீவு போட அடிக்கடி சாகடித்தோம்.
**
பெரிய மழை வந்தால் ஸ்கூல் லீவு என
சந்தோஷப்பட்டுக் கொண்டோம்.
**
முழு ஆண்டு விடுமுறையில்
மாமா பெரியப்பா பாட்டி வீட்டுக்கு
டூர் போனோம்.
**
ஒரே ஒரு ரூபாயைக் கையில்
வைத்துக்கொண்டு அன்று முழுவதும்
செலவு செய்தோம்.
**
100ரூபாய் நோட்டை ஆச்சரியத்துடன்
கையில் வாங்கி பெருமூச்சு
விட்டோம்.
அனைவர் வீட்டிலும் உண்டியல்
இருந்தது.
**
பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக
நின்றுகொண்டே படம் முழுவதையும்
பார்த்து ரசித்தோம்.
**
பீரோக்கள் முழுவதும் சக்திமான்
ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து அழகு
பார்த்தோம்.
**
ஹார்லிக்ஸ் பாட்டில்களில் மீன்களை
வளர்த்தோம்.
**
பொங்கலுக்கும் தீபாவளிக்கும்
கிரிட்டிங் கார்டு வாங்க குவிந்து
நின்று தேர்வு செய்தோம்.
**
10வது 12வது ரிசல்ட் பார்க்க மாலைமுரசு விற்பனைக்
கடையின்
வாசலில் தவம் கிடந்தோம்.
**
15வயதுவரை டவுசர்களையே
அணிந்திருந்தோம்.
**
பழைய மாடல் கேசட்களில் பிலிம்
சிக்கிக்கொண்டால் ரெனால்ஸ்
பேனாவால் உள்ளே விட்டு சுத்தி
சுத்தி அட்ஜஸ்ட் செய்தோம்.
**
கன்னிப்பெண்கள் அனைவருமே நதியா
மாடல் கொண்டை போட்டு அழகுபார்த்தார்க
ள்.
**
பணக்கார வீட்டு கன்னிப்பெண்கள் BSA SLR
சைக்கிளில் பேஷனாக வலம் வந்தார்கள்.
**
ஜாமென்ட்ரி பாக்ஸில் காசுகளையும்
மிட்டாய்களையும் போட்டு
வைத்தோம்.
**
நம் ஊரில் TVS-50 வைத்திருந்தவர்கள்
பணக்காரர்களாக இருந்தார்கள்.
**
கட்டான கரண்ட் மீண்டும் வந்ததும்
மகிழ்ச்சியில் கத்தி ஆராவரப்படுத்தினோம்.
**
வசதிகள் குறைவு.....
மனங்களின் நெருக்கம் அதிகம்.....
அன்றையப் பொழுதின் அருமை அன்று தெரியவில்லை...,.
போன்சாய் கன்றுகளாய் வளராமலேயே இருந்திருக்கலாமோ.......
காலத்தின் கரங்களில் தாயக்கட்டைகளாய் நாம்...

மலரும் நினைவுகள்!!!!.



Wednesday, 18 January 2017

ஸெல்ஃபி பொங்கல்


😜😜😜😜😜😜😜

என்னடி..
பொங்கலை
ரொம்ப நேரமா
கிளர்ற?
பொங்கல் வேகலையோ?

இல்லீங்க,
'செல்பி'
எடுக்கறப்போ
மொபைல்
உள்ள விழுந்திருச்சு...
அதைத்தான்
தேடிட்ருக்கேன்.



😀😀😀😀😀😀😀



Tuesday, 17 January 2017

வெற்றி..

*4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !
*8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
*12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
*18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
*22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
*25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
*30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
*35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
*45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !
*50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
*55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
*60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
*65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
*70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
*75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
*80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

Monday, 16 January 2017

முனுசாமி



😇😇😇குடிகார முனுசாமியை தொட்டியில் மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்துக் கொண்டு பாஸ்ட்டர் கூறினார்.

" உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டது. இன்றுமுதல் நீ பரிசுத்தமானவனாகிறாய், ''மோசஸ்' என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்யம் செய்துகொடு மோசஸ்".

"சத்யம் பாஸ்ட்டர் இனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன், சர்பத் குடிக்கலாமா பாஸ்டர்?"
"தாராளமாக எத்தனை தடவ வேணும்னாலும் குடிக்கலாம்"

ஓகே பாஸ்ட்டர்.
மோசஸான குடிகார முனுசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு புல் பாட்டில் விஸ்கியை எடுத்து தொட்டியில் இருந்த தண்ணீருக்குள் மூன்றுமுறை முக்கி எடுத்துக்கொண்டு கூறினான்.

" உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது. நீ புதிதாக சுத்தமானதாக பிறந்திருக்கிறாய். இன்றுமுதல் நீ 'சர்பத்' என்றழைக்கப்படுவாய். ஆமேன்... "😂😂😂



Thursday, 12 January 2017

கடவுள்...



கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது..

ஒரு நன்பர் நேரில் பார்த்த உண்மை சம்பவம்..!

ஒரு ஊரில் உள்ள சிறிய உணவகத்தில்..பள்ளி சீருடை அனிந்த
ஆறு வயது மதிக்கத்தக்க சின்ன பெண்(கையில் தூக்கு வாளியுடன்):

பெண் குழந்தை :-
பாட்டி ...! அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க...
காசு நாளைக்கு தராங்களாம்...!

ஹோட்டல் நடத்தும் பாட்டி : -
ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லும்மா..இதில உனக்கு... தம்பிக்கு..உன் அம்மாவுக்கு..
எல்லோருக்கும் சேர்த்து '15 இட்லி வச்சிருக்கேன்
தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....

(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).

குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் பாட்டி .... (குழந்தை கிளம்பிவிட்டாள்)

அந்த கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம் ஆதலால் அந்த
நனபர் மனதில் நினைத்ததை அந்த பாட்டியிடம் கேட்டார்...!

நன்பர் :
நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க பாட்டி ....!

பாட்டி :
அட சாப்பாடுதானே பா ....நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல பா ...அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்....எல்லாருக்கும் பணம் சுலப-மாவா சம்பாதிக்க முடியுது....

நான்: ஏன் பாட்டி அவங்க வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல..!

பாட்டி :
குழந்தை கேட்டிருக்கும்.. அதான் சார் அனுப்பி இருக்காங்க...
அவங்க கணவர் 'பக்கவாதம் வந்து வேலைக்கு போகமல் வீட்லதான்
இருக்காரு..! இவங்க அம்மாதான் கூலி வேலைக்கு போவும்.சில நேரம்
சாலை ஓரத்தில காய்-கரி வியாபாரம் செய்து கணவர் மற்றும் இரணடு
பிள்ளைகளை காப்பாற்றுது..!.
நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பலப் பா ... நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...வந்துடும் பா ...ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்டுதுல்ல அதுதான் பா முக்கியம்....!

'கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது..
இடலி பாட்டிதான் இந்த ஏழைகளின் கடவுள்...

இதை படிப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இது போன்றவர்களை வாழ்கையில் கடக்க நேரிட்டால் உங்களால் ஆன உதவியை செய்து விட்டு வாருங்கள். சிறிய உதவி என்று எதுவுமே இல்லை. சரியான நேரத்தில் செய்யப்படும் எந்த உதவியும் ஞாலத்தினும் மானப் பெரிது !!



பாட்டி உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை..
மாமனிதநேயமுள்ள உங்களை..உங்கள் பாதம் தொட்டு
வணங்குகிறேன்....!

நட்புடன் உங்கள் நண்பன் .



Wednesday, 11 January 2017

பெயர் என்ன...

#ஹாஹாஹாஹா எனக்கே ப்ரஷ்ஸர் ஏறிடுச்சு.அப்போ அவருக்கு ஏறாதா என்ன.!!!
_________________________________________

ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சோதனை செய்ய கல்வி ஆய்வாளர்(CEO) ஒருநாள் திடீரென வந்தார்.அது ஒரு வீம்பு புடிச்ச பள்ளிக்கூடம் என்பதால் அந்த ஊர பத்தி ஏற்கனவே நிறைய பேர்கிட்ட விசாரிச்சிட்டு வந்துள்ளார்.பிறகு ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தார் ஆய்வாளர்.அவர பாத்ததும் பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க.

சரி இந்த பசங்ககிட்ட பாடம் சம்பந்தமா கேள்விலாம் கேக்க வேணாம்.முதல்ல இவங்கள பத்தி கேப்போம்னு நினச்சு ஒரு பையன எழுப்பினார்.

CEO : உன் பேர் என்ன?

BOY-1 : பழனி

CEO : உன் அப்பா பேரு?

BOY-1 : பழனியப்பா

(அடுத்தப் பையன எழுப்பி)

CEO : தம்பி உன் பேர் சொல்லு?

BOY-2 : மாரி

CEO : உன் அப்பா பேரு ?

BOY-2 : மாரியப்பா

(சிறிய சந்தேகத்துடன் அடுத்தப் பையன எழுப்பி)

CEO : உன் பேர் சொல்லு தம்பி?

BOY-3 : பிச்சை

CEO : உன் அப்பா பேரு?

BOY-3 : பிச்சையப்பா

இப்போ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு,
சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்கனு புரிஞ்சுகிட்டாரு.கொஞ்சம் உஷாரா அடுத்த பையன்கிட்ட கேள்வியே மாத்தி கேட்டாரு

CEO : தம்பி,நீ முதல்ல உன் அப்பா பேரைச் சொல்லு?

BOY-4 : ஜான்

CEO : இப்பொ உன் பேரைச் சொல்லு ?

BOY-4 : ஜான்சன்

(கொஞ்சமா டென்சன் ஆயிட்டு, அடுத்த பையன எழுப்பி,)

CEO : உன் அப்பா பேர சொல்லு,

BOY-5 : தாசன்

CEO : சரி உன் பேரு என்ன?

BOY-5 : காளிதாசன்

(கொலவெறி ஆயிட்டாரு நம்ம ஆய்வாளர்.பிறகு
கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,வித்யாசமா கேள்வி கேட்டாரு)

CEO : உன் தாத்தா பேர சொல்லுடா?

BOY-6 : மணி

CEO : சரி அப்பா பேரு?

BOY-6 : ரமணி

CEO : உன் பேரு?

BOY-6 : வீரமணி

(ஆய்வாளருக்கு லேசாக நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது.நெஞ்சில் கை வைத்து பிடித்துக்கொண்டே கடைசி பையனிடம் கேட்டார்)

CEO : உன் தாத்தா பேர் என்னடா?

BOY-7 : தீன்

CEO : உன் அப்பா பேரு?

BOY-7 : மொய்தீன்

CEO : உன் பேருருரு? (லேசாக மயங்குகிறார்)

BOY-7 : ஹாஜா மொய்தீன்

அப்புறம் என்ன.! அந்த ஆய்வாளர் நெஞ்சுவலி வந்து கீழ விழுந்துட்டார்.ஆம்புலன்ஸ்ல தூக்கிட்டு போயிட்டாங்க.அதோட அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வர்றதே இல்ல.

😜😝🍼