காலம் மாறாமல் மாற்றியது நம்மை..........
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும்
ஊரே அமர்ந்து பார்த்தோம்.
**
ஞாயிற்றுக்கிழமை மாநிலமொழி
திரைப்படம் தமிழில் போடமாட்டார்களா
என ஏங்கி கிடந்தோம்.
**
திங்கள்கிழமை பள்ளியில் அமர்ந்து
கொண்டு ஞாயிறன்று பார்த்த
படத்தைப்பற்றி விவாதம் செய்தோம்.
**
தாத்தவையும் பாட்டியையும் ஸ்கூல்
லீவு போட அடிக்கடி சாகடித்தோம்.
**
பெரிய மழை வந்தால் ஸ்கூல் லீவு என
சந்தோஷப்பட்டுக் கொண்டோம்.
**
முழு ஆண்டு விடுமுறையில்
மாமா பெரியப்பா பாட்டி வீட்டுக்கு
டூர் போனோம்.
**
ஒரே ஒரு ரூபாயைக் கையில்
வைத்துக்கொண்டு அன்று முழுவதும்
செலவு செய்தோம்.
**
100ரூபாய் நோட்டை ஆச்சரியத்துடன்
கையில் வாங்கி பெருமூச்சு
விட்டோம்.
அனைவர் வீட்டிலும் உண்டியல்
இருந்தது.
**
பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக
நின்றுகொண்டே படம் முழுவதையும்
பார்த்து ரசித்தோம்.
**
பீரோக்கள் முழுவதும் சக்திமான்
ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து அழகு
பார்த்தோம்.
**
ஹார்லிக்ஸ் பாட்டில்களில் மீன்களை
வளர்த்தோம்.
**
பொங்கலுக்கும் தீபாவளிக்கும்
கிரிட்டிங் கார்டு வாங்க குவிந்து
நின்று தேர்வு செய்தோம்.
**
10வது 12வது ரிசல்ட் பார்க்க மாலைமுரசு விற்பனைக்
கடையின்
வாசலில் தவம் கிடந்தோம்.
**
15வயதுவரை டவுசர்களையே
அணிந்திருந்தோம்.
**
பழைய மாடல் கேசட்களில் பிலிம்
சிக்கிக்கொண்டால் ரெனால்ஸ்
பேனாவால் உள்ளே விட்டு சுத்தி
சுத்தி அட்ஜஸ்ட் செய்தோம்.
**
கன்னிப்பெண்கள் அனைவருமே நதியா
மாடல் கொண்டை போட்டு அழகுபார்த்தார்க
ள்.
**
பணக்கார வீட்டு கன்னிப்பெண்கள் BSA SLR
சைக்கிளில் பேஷனாக வலம் வந்தார்கள்.
**
ஜாமென்ட்ரி பாக்ஸில் காசுகளையும்
மிட்டாய்களையும் போட்டு
வைத்தோம்.
**
நம் ஊரில் TVS-50 வைத்திருந்தவர்கள்
பணக்காரர்களாக இருந்தார்கள்.
**
கட்டான கரண்ட் மீண்டும் வந்ததும்
மகிழ்ச்சியில் கத்தி ஆராவரப்படுத்தினோம்.
**
வசதிகள் குறைவு.....
மனங்களின் நெருக்கம் அதிகம்.....
அன்றையப் பொழுதின் அருமை அன்று தெரியவில்லை...,.
போன்சாய் கன்றுகளாய் வளராமலேயே இருந்திருக்கலாமோ.......
காலத்தின் கரங்களில் தாயக்கட்டைகளாய் நாம்...
மலரும் நினைவுகள்!!!!.
அது ஒரு அழகிய நிலாக்காலம்...
ReplyDeleteம்...
ஆமா ஸார்.. நன்றி..
Deleteசமீபத்திய ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சந்தோஷங்கள் ஒவ்வொன்றையும் வெகு அழகாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
நன்றி ஸார்.
Delete1985-1986 இல் என் வீட்டுக்கு எதிர் வீட்டில் மட்டும் டி.வி. உண்டு. அவர்கள் வீட்டை அடைய நடுவில் போக்குவரத்துகள் அதிகம் உள்ள மிகப்பெரிய ரோட்டை கிராஸ் செய்ய வேண்டும்.
ReplyDelete10 வயது, 8 வயது, 3 வயது மட்டுமே ஆன என் பிள்ளைகள் மூவரும் கண்மூடித்தனமாக ரோட்டை கிராஸ் செய்து அந்த வீட்டுக்குப்போய் ‘அப்பு அவுர் பப்பு ?’ என்ற குழந்தைகளுக்கான யானைப்படத் தொடர் பார்க்க ஓடிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களின் அந்த ஓட்டத்தைத் தவிர்க்க மட்டுமே என் வீட்டில், நான் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒரு மிகச்சிறிய சைஸ் ப்ளாக் & ஒயிட் பிலிப்ஸ் டி.வி. பெட்டி + ஆண்டனா வாங்கிப் பொருத்த வேண்டியதாகிப் போனது. கொடைக்கானலிலிருந்து மட்டுமே டி.வி. நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்ததோர் காலம் அது.
வெள்ளிக்கிழமை ’ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சி மட்டுமே வீட்டில் உள்ள எல்லோருக்கும் புரியக்கூடியதாக இருந்தது.
ஞாயிறு தோறும் அருதப்பழசாக, 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்துள்ள ‘சக்குபாய்’ போன்ற ஒரு தமிழ்ப்படம் வெளியிடுவார்கள்.
அதிலும் அன்று என்ன படம் என்பதை மிகவும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருப்பார்கள்.
ஒரு நாள் அபூர்வமாக ‘திருவிளையாடல்’ படம் ஒலி பரப்பினார்கள்.
எங்கள் மிகச்சிறிய வீட்டில் அன்று சினிமா கொட்டகை போல அக்கம் பக்கத்து வீட்டினர் எல்லோரும் (சுமார் 50 பேர்கள்) கூடி அமர்ந்து விட்டார்கள்.
இன்னும் அவையெல்லாம் பசுமையான நினைவுகளாக உள்ளன.
நினைவலைகளை மீட்டுத் தந்துள்ள தங்களின் இனிய இந்தப் பதிவுக்கும் பகிர்வுக்கும் என் நன்றிகள். :)
இந்த மிகச்சிறிய 30 ஆண்டுகளுக்குள் விஞ்ஞான தொழில்நுட்ப தகவல் பரிமாற்றங்களில் எத்தனை எத்தனை மாற்றங்கள் ... ஒவ்வொன்றையும் நினைத்தால் மிகவும் வியப்பாகத்தான் உள்ளது.
ஆமா இப்படி ஒவ்வருக்கும்பல மலரும் நினைவுகள் இருக்குது..
Deleteஎத்தனை மாற்றங்கள்.....
ReplyDeleteமாற்றம் ஒன்றே மாறாததாம்....
Delete