Followers

Followers

Sunday, 1 January 2017

புத்தி வந்ததா....

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

 ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?

    -

 ☺😊😀😂😃😄😅😆

6 comments:

  1. புத்திவரவேண்டி யோசித்து எழுதியுள்ள அனைத்துமே மிகவும் சிந்திக்க வைக்கிறது. இருப்பினும் இனி அது (பழங்காலமெல்லாம்) வருமோ என சந்தேகமாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அது எப்படி வரும்.. பழயன கழிதலும் பகுதியான புகுதலும்தானே வாழ்க்கை.

      Delete
  2. அப்படிச் சொல்லுங்க...!

    உண்மைகள்...!

    ReplyDelete
  3. வாங்க டி.டி.ஸார். நன்றி.

    ReplyDelete
  4. படிக்க நல்லாத்தான் கருத்தாக இருக்கிறது ... ஆனால் implement பண்ண ......ம்ஹூம்

    ReplyDelete
  5. வாங்க.. படிக்க நல்லாருக்குல்ல.. அவ்வளவுதான்.. வருகைக்கு நன்றி.

    ReplyDelete