Followers

Followers

Tuesday, 24 January 2017

வக்கீல்...



வக்கீல் ஒருவர் ரயில்ல சென்று கொண்டு இருந்தார்...
அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவருக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து உட்கார்ந்தால்.. நம்மாளுக்கு செம குஷி... அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால லைட்டா நம்மாளு அந்த சூப்பர் பொண்ண நோட்டம் உட்டார்... அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவர பாக்க... இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தார்... கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவர் இருந்த சீட் பக்கம் வந்து ஒக்கார... நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு இருந்தார்... அந்த பொண்ணு இவர்கிட்ட... ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதிரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு....இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிச்சாம் அந்த சூப்பர் பிகர்...

அவர் தான் வக்கீல் ஆச்சே... அதுக்கு நம்ம வக்கீல்.. பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து, எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது... நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில... நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு எழுதி காட்டினார்... அந்த பொண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாலோ.... அதே மாதிரி அப்படியே எழுதி காட்டினாளாம்... அத வாங்கி பாக்கெட்ல வச்ச பின்னாடி நம்மாளு மெதுவா சொன்னாரு.... இப்போ கத்துடி பாக்கலாம்...!!! கொய்யால, யாருகிட்ட! 😜😜😜

நீதி:" PROOF OF DOCUMENTATION IS VERY VERY IMPORTENT"
எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம்.

படித்ததில் பிடித்தது.




7 comments:

  1. தங்களின் ‘படித்ததில் பிடித்தது’ நீதிக்கதை சூப்பர் !

    //நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு இருந்தார்...//

    இதுவரை படிக்க எனக்கும் ஜிவ்வுன்னுதான் இருந்தது. :)

    //எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம்.//

    ஆமாம். அதைவிட முக்கியம் .......

    //நீதி:"PROOF OF DOCUMENTATION IS VERY VERY IMPORTENT"//
    என்பதில் IMPORTANT என்று ஸ்பெல்லிங் கரெக்டா போட்டிருக்க வேண்டியது மிகவும் IMPORTANT :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. மீண்டும் வாசித்தேன் உங்களின் தளத்தில்...

    ReplyDelete
  3. இதற்கு நீங்கள் முகநூலில் இருக்கலாம்...

    சொந்த அனுபவ பதிவுகள் என்றும் சிறப்பு...

    புரிந்தால் நன்றி...
    புரிதலுக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மூஞ்சி பொஸ்தகத்துலயும் இருக்கேன்ஸாரே...)))))
      நன்றி..

      Delete