Followers

Followers

Monday, 9 January 2017

வெண்ணை..



ஹோட்டல் முதலாளி: புதுசா ‍‍வேலைக்கு சேர்ந்த அரவை மாஸ்டரிடம், இங்க பாருப்பா மாவு நல்லா நைசா அரைக்கனும் தெரியுதா?

சரிங்க முதலாளி அப்படியே அரைச்சுடறேன்னு சொல்லிட்டு அரைச்ச மாவை முதலாளி கிட்ட காமிச்சா, பரவாயில்லை ஆனா இன்னும் நைசா அரைக்கனும்..

அடுத்த நாள் கூடுதலா நேரம் எடுத்து கிரைண்டர்ல அரைச்சு கொண்டுவந்து முதலாளிகிட்ட காட்றாரு. நேத்தையவிட இன்னைக்கு பரவாயில்ல. நாளைக்கு அரைக்கிற மாவு வெண்ணைய் மாதிரி நைசா இருக்கனும்கிறார்..

இது என்னடா இவ்வளவு நைசா அரைச்சும் முதலாளிக்கு திருப்தியா இல்லையேன்னுட்டு, சரி இன்னைக்கு ஒரு ‍வேலை பண்ணுவோம் முதலாளி இதுக்கு என்ன சொல்றாருன்னு பாப்போம்னு மாவு அரைச்சு முடிச்சதுக்கப்புறம் முதலாளிகிட்டே கொண்டுபோய் காட்றாரு.. இன்னப்பா நேத்து அவ்வளவு சொல்லியும் மாவு வெண்ணைய் மாதிரி நைசா அரைக்கலை யேன்னுட்டார் முதலாளி..

இன்னையோட நான் என்வேலையை ராஜினாமா பண்றேன்முதலாளி, ஏன்யா வந்த 3 நாள் தானே ஆகுது என்ன பிரச்சனை உனக்கு, எனக்கு இங்க சரிப்பட்டு வராது, ஏன் என்னய்யா ஆச்சு?

முதலாளி நானும் மாவை நைசா அரைச்சு கொண்டுவந்து 2 நாளா காமிச்சேன். உங்களுக்கு திருப்திப்படலே. இன்னைக்கு வெண்ணையே கொண்டுவந்து அரைச்ச மாவுன்னு காமிச்சேன் அப்பவும் நீங்க வெண்ணைய் மாதிரி இருக்கனும்னு சொல்றீங்க, இதுக்கு மேல உங்கள திருப்திப்படுத்தமுடியாது கிளம்பறேன்னு சொல்லிகிளம்பிட்டார்..

மனிதனை உற்சாகப்படுத்துவது சிரிப்பு.. கவலைகளை மறக்கச் செய்வது சிரிப்பு..உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது சிரிப்பு.. சிரிப்போம். மற்றவர்களை சிரிக்கவைப்போம்..😂😂😂😀😀😀😀😀




5 comments:

  1. முதலாளி சுத்த வெண்ணெயாய் (வழுவட்டையாய்) இருப்பார் போலிருக்குது. ரஸித்தேன். சிரித்தேன்.

    வழுவட்டை பற்றி அறிய இதோ இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸார். உங்க " வழுவட்டை" பதிவு ஏற்கனவே படித்து ரசித்திருக்கேன்...

      Delete
  2. அருமை...

    சிரித்து வாழ வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஸார் வருகைக்கும்......... மறு இணைப்புக்கும்"....நன்றிகள்..

      Delete
  3. முதலாளி சுத்த வெண்ணெயாய் (வழுவட்டையாய்) இருப்பார் போலிருக்குது. ரஸித்தேன். சிரித்தேன்.

    வழுவட்டை பற்றி அறிய இதோ இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

    ReplyDelete