Followers

Followers

Sunday, 12 February 2017

சிற்பம்


தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.

திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லைஎன்றால் அந்த சிங்கம் திண்றுவிடும்"

அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும் செய்யாதது"

மகள் அப்பாவிடம் "சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால் கடவுளின் சிற்பம் நமக்கு என்ன செய்யும்"

தந்தையிடம் பதில் இல்லை..........

படித்ததில் பிடித்தது



Thursday, 9 February 2017

சசி வர்ணம்...


அர்ச்சகர்: சுக்லாம் ப்ரதம்
விஷ்ணும் சதுர்புஜம்
சசி வரணும்
சசி வரணும்
சசி வரணும்..

பக்தர்: சுவாமி சசி வந்தாச்சு..
அடுத்த மந்திரத்த சொல்லுங்கோ

தமிழ்நாடு ஸ்வாகா ☹☹☹☹



Wednesday, 8 February 2017

ஹெட் மாஸ்டர்



ரசித்துச் சிரித்தேன்...

ஒரு பெண் தன தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவளைக் காண அவளது தோழன் வருகிறான்.

உடனே அந்த பெண் அவனிடம்," நீ பாமுக் எழுதிய,"அப்பா வீட்டில் இருக்கிறார்" என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தியா?" என்று கேட்கிறாள்.

உடனே அவன் அந்த பெண்ணிடம்,"இல்லை நான் ஹும்ம்ஸ் எழுதிய "நான் எங்கே காத்திருப்பது உனக்காக ? என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தேன்" என்கிறான்.

உடனே அந்த பெண்,"என்னிடம் அந்த புத்தகம் இல்லை, எனவே நீ என்னிடம் உள்ள.. கிரிஷ் எழுதிய "மாமரத்துக்கடியில் காத்திரு" என்ற புத்தகத்தை பெற்று கொள்" என்கிறாள்.

உடனே அவன் அந்த பெண்ணிடம், நீ நாளை பள்ளிக்கு வரும் போது... "ஐந்து நிமிடத்தில் உன்னை அழைக்கிறேன்'' என்ற ரிடெய்ல் மேனேஜ்மென்ட் புத்தகத்தை கொண்டு வா என்கிறான்.

உடனே அந்த பெண் அவனிடம், பகத் எழுதிய "நான் உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்ற புத்தகத்தையும் உனக்கு கொண்டு வருகிறேன் என்கிறாள்.

உடனே அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணிடம், "இவன் இவ்வளவு புத்தகத்தையும் படிப்பானா?" என்று கேட்கிறார்.

உடனே அந்த பெண்," ஆமாம் அப்பா, அவன் மிகவும் அறிவும், புத்தியும் மிகுந்தவன்" என்று கூறுகிறாள்.

உடனே பெண்ணின் தந்தை கூறுகிறார்..," நீ அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய "வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை" என்ற புத்தகத்தையும் மறக்காமல் குடு என்கிறார்.

நீதி : அடேய்.. நீ LKG படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா...

Tuesday, 7 February 2017

நான்யார்...












🌷 *நான் யார்* 🌷
ஜீவன்.

ஜீவன் என்றால்..?
ஆத்மா+அனாத்மா இவ்விரண்டும் இணைவது ஜீவன்......!!!

அனாத்மா என்றால்....???
மூன்று உடல்
ஐந்து கோசம்
மூன்று அவஸ்தை
இதுவே அனாத்மா......!!!

மூன்று உடல் என்றால்......???
காரண உடல்
சூட்சும உடல்
ஸ்தூல உடல்
மூன்றும் இணைந்தது.....!!!

காரண உடல் என்றால்.....???
ஆத்மா சார்ந்து நோக்கத்தினை வெளிபடுத்துவது......!!!

சூட்சும உடல்....???
மிக நீண்ட விளக்கமுள்ளது..,
சுருக்கமாய் ருசி. கேட்டறியும் திறன்., பார்வை.., வாசனை.., மனம், புத்தி இது போன்ற கண்ணுக்கு தெரியாத சக்தி, உடல் உணரக்கூடிய காந்த சக்தி........!!!

ஸ்துல உடல்......???
நீங்கள் கண்ணால் காணும் உடல்.......!!!

நான்
உடலல்ல
மனமல்ல
நான்
ஆத்மா......!!!

ஆத்மா என்றால்......???
உண்மையாகவும்
நிரந்தரமாகவும்
உள்ள அறிவாற்றல், அந்த அறிவாற்றலே இறையாற்றல், இதைஉணர்ந்து கொண்டால் நானே ஏகம் என்ற உண்மை விளங்கும்......!!!

வாழ்க வளமுடன்



Monday, 6 February 2017

தர்மம் தலை காக்கும்..




படித்ததில் பிடித்தது:

இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.

அவன் முனகியது, இதுதான்:
" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்.

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே.





Wednesday, 1 February 2017

ஏழ்மை....

ஒரு பணக்காரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்கக் கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்துச் சென்றான். இரு தினங்கள் தங்கிவிட்டுப் பின்னர் வீட்டிற்குத் திரும்பினதும் #ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான்...
அப்பா நம் வீட்டில் ஒரேயொரு நாய் இருக்கிறது, கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம், அந்த கிராமத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது. நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது, அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது. நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம், அவர்கள் உடனடிப் பாலைக் கறந்து சாபிடுகிரர்கள். நாம் வாடிய காய்கறிகளைச் சாப்பிடுகிறோம், அவர்கள் செடியில் இருந்து பறித்துப் பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிறார்கள் . நாம் வீட்டைச் சுற்றி மதில் கட்டிப் பாதுகாக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிக்கொண்டே சென்றான்...
மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது.. தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று...
ஏழ்மை என்பது நம் எண்ணத்திலேயே குடி கொண்டால் என்னதான் வசதி கிடைத்தாலும் ஏழ்மையிலுருந்து விடுதலை கிடைக்காது...!

கடவுளே.....

👳கணவன் : என்ன சமைச்சிருக்கே?
சாணி மாதிரி இருக்கு. நல்லாவேயில்ல.
.
.
.
👩மனைவி : கடவுளே! இவர் இன்னும்
என்னவெல்லாம்
சாப்பிட்டு பார்த்திருக்காரோ தெரியலையே!😜😜😜😜😜