Followers

Followers

Thursday, 7 April 2016

☎📞☎📞☎📞☎📞☎📞
 மாதா அமிர்தானந்தமயி சொற்பொழிவாற்றும் போது கூறிய குட்டி கதை..!!

ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார். ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன். நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி.  மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான். நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன். வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். நாம் செய்யும் தவறை மற்றவர்கள் செய்தால் நமக்கு அதிர்ச்சியாகிறது. மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும்.

இந்த குட்டிக்கதையை மாதா அமிர்தானந்தமயி கூறினார்.
Good night

2 comments:

  1. இந்தக்கதையை ஏற்கனவே நான் படித்திருப்பினும், மீண்டும் இங்கு படித்ததில் மிக்க மகிழ்ச்சி ஆகிப்போனேன். கதையின் நீதி அருமை. பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    ReplyDelete
  2. வருகைக்கும் க்ருத்துக்கும் நன்றிகள் ஸ்ர்....

    ReplyDelete