Followers

Followers

Saturday, 16 April 2016

ஒரு அதிகாலைப்பொழுது! கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.

"டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?"

கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ... அப்படின்னா நான் fat-ஆ இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க?" என்றாள்.

கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!"

மனைவி: "அப்போ என்னை sick-ன்னு சொல்றீங்களா?"

கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"

மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"

கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"

மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"

கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"

மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"

கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"

மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!"

கணவன்: "Ok! நானும் போகலை. போதுமா?"

மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை blame பண்றீங்க!"

கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"

மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"

வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை! டயர்டாகி படுத்துவிட்டான்.

திருமணமான ஆண்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்!

Good night

3 comments:

  1. இதனை சமீபத்தில் வேறு எங்கோ படித்துள்ளேன். இருப்பினும் மீண்டும் இன்று இங்கு படித்துச் சிரித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வருகைக்கும். .கருத்துக்கும். . நன்றிகள்... ஸார்

    ReplyDelete
  3. http://honeylaksh.blogspot.in/2016/05/blog-post.html

    இந்த இணைப்புக்குக் கொஞ்சம் வாங்கோ, ப்ளீஸ்....

    ReplyDelete