Followers

Followers

Friday, 28 October 2016

தீபாவளியும் நானும்..


தீபாவளியும்&நானும்...😍

சின்ன வயசுல அப்பா புதுவருச காலண்டர் வாங்கின உடனே முதல பாக்குற முக்கியமான விஷயம் தீபாவளி எப்ப வருது ...எத்தினி நாள் லீவு வருதுனு தான்...??? அப்பிடி பாத்து பாத்து தீபாவளியை ரசிச்சி கொண்டாடின கடைசி தலைமுறை நாம தான்....😍😍😍😍
தீபாவளிக்கி 45 நாள் முன்னாடியே ஸ்கூல்ல பசங்ககிட்ட என்னா டிரஸ் எடுக்கணும்...என்னா வெடி வாங்கணும்னு திட்டம் போட்ட காலம் எல்லாம் இப்ப நினைச்சாலும் மனசு சின்ன புள்ளயா மாறிடும்...அதுலையும் வெங்காய வெடி&அணுகுண்டு வெடிக்கிறவனை எல்லாம் வாய பொளந்துகிட்டு பாப்போம்...ஜீன்ஸ் எடுக்கணும் டீசர்ட் எடுக்கணும்னு பிளான் போட்டுட்டு கடைசிலா குடும்ப சூழ்நிலை  காரணமா ஏதாவது ஒரு டிரஸ் கிடைச்சா போதும்னு அழுத நாட்கள் எல்லாம் இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு...என்னா தான் இன்னிக்கி சொந்தமா சம்பாரிச்சி மெகா மார்ட்லையும்,ரேமண்ட் ஷாப்புலையும் 3000ரூபாய்க்கி டிரஸ் எடுத்தாலும் அன்னிக்கி அப்பா தீபாவளிக்கி முதல் நாள் கூட்டிட்டு போய் எடுத்து குடுத்த 250ரூபாய் டிரஸ்சோட மதிப்பு எல்லாம் சொல்லவே முடிலா...!!!
அதே மாறி தீபாவளிக்கி ஒரு வாரம் முன்னாடி வீட்டுல முறுக்கு சுடுறப்ப அந்த திருவிழா கொண்டாட்டம் மனசுக்குள்ள வந்துரும்...
தீபாவளி முதல் நாள் நைட்டு பசங்க எல்லாம் வீட்டுல இருந்து சேத்து வச்ச காச(ஆட்டைய போட்ட காசும் தான் 😉) எடுத்து தீன் சிக்கன் கார்னர்லா முழு கோழி வாங்கி நண்பன் பீரவின் வீட்டு மாடில உட்காந்து சாப்பிட்டது எல்லாம் சொர்க்கம்...😍😍😘😍
தீபாவளி முதல் நாள் கூட்டத்துல விடியற்காலை 3மணி வரை ஊரை ரவுண்ட் அடிச்சிட்டு வழியில பாக்குற தெரிஞ்ச பசங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு...6மணிக்கே எந்திரிச்சி எண்ணெய் தேய்ச்சி குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு...7மணி மொத ஷோ படத்துக்கு போய் தியேட்டர்லா தொண்டை கிழிய கத்தி பிடிச்ச ஹீரோவோட படத்தை பாத்து,அப்பிடியே ப்ரண்ட் வீட்டுல சாப்புட்டு...மத்தியானமே இன்னோரு படத்துக்கு போய் பாத்துட்டு தீபாவளியை கொண்டாடிய நாட்கள் எல்லாம் திரும்ப வராது...அதெல்லாம் உலக நாயகன் சொல்லுற படி ஆராயக்கூடாது அனுப்பவிக்கனும்..😍😍😍
இன்னும் எழுத எழுத நிறைய தோணுது...

இப்பவும் தீபாவளி கொண்டாடுறாங்கா..அடையார் ஆனந்தபவன்ல அரைகிலோ ஸ்வீட்டு வாங்கிட்டு..அமேசான்ல டிரஸ் எடுத்துட்டு..😠😠😠
ஒண்ணு மட்டும் நிச்சயம்   பணம்,சம்பாத்தியம்&கார்ப்ரேட் வாழ்க்கைனு ஒரு மாயவலையை உருவாக்கி வாழ்க்கையோட சின்ன சின்ன சந்தோஷங்களை அதுல இழந்துகிட்டு வரோம்...:(

#Advance_Diwali_Wishes...!!!



2 comments:

  1. இனிய நினைவலைகள்.

    //பணம்,சம்பாத்தியம் & கார்ப்ரேட் வாழ்க்கைனு ஒரு மாயவலையை உருவாக்கி வாழ்க்கையோட சின்ன சின்ன சந்தோஷங்களை அதுல இழந்துகிட்டு வரோம்...:(//

    கரெக்டூஊஊஊஊஊஊ.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நன்றி கோபால் ஸார்தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

    ReplyDelete