Followers

Followers

Friday, 19 May 2017

தவறே இல்லை.

சரி என்று வரும் வரை
தப்புகள் தவறே இல்லை

தெளிவு வரும் வரை
குழப்பங்கள் தவறே இல்லை

அழகு வரும் வரை
பருக்கள் தவறே இல்லை

உறவு வரும் வரை
தனிமைகள் தவறே இல்லை

சேர்க்கை வரும வரை
பிரிவுகள் தவறே இல்லை

பொறுப்பு வரும் வரை
குறும்புகள் தவறே இல்லை

காதல் வரும் வரை
ஏமாற்றம் தவறே இல்லை

குடும்பம் வரும் வரை
சுதந்திரம் தவறே இல்லை

வாய்ப்புகள் வரும் வரை
காத்திருப்பு தவறே இல்லை

வெற்றி வரும் வரை
தோல்விகள் தவறே இல்லை

3 comments:

  1. ஆஹா, இந்தப்படைப்பினில் எதுவும் தவறே இல்லை. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete