Followers

Followers

Thursday, 18 May 2017

நீ. நீயாகவே. இரு..

*நீ . . .நீயாக இரு !*

தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
*எனவே நீ . . .நீயாக இரு !*

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
*நீ . . .நீயாக இரு !*

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
*நீ . . .நீயாக இரு !*

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
*நீ . . .நீயாக இரு !*

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
*நீ . . .நீயாக இரு !*

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
*நீ . . .நீயாக இரு !*

நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
*எனவே நீ . . .நீயாக இரு !*

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
*நீ . . .நீயாகவே இரு !*

5 comments:

  1. மிகவும் அருமையான ஆச்சர்யமான வரிகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  2. ஏனோ என் சமீபத்திய பதிவுகள் பலவற்றில் தங்களைக் காணவே காணும். ஸ்ரத்தா ஸபுரி போன்ற தங்கள் நண்பர்களையும் காணும்.

    என் மீது ஏதேனும் கோபமோ என்னவோ என ஒரே கவலையாக உள்ளது.

    ReplyDelete
  3. வருகைக்கும். கருத்துக்கும். நன்றி. ஸார்

    ReplyDelete