Followers

Followers

Saturday, 16 April 2016

ஒரு அதிகாலைப்பொழுது! கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.

"டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?"

கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ... அப்படின்னா நான் fat-ஆ இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க?" என்றாள்.

கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!"

மனைவி: "அப்போ என்னை sick-ன்னு சொல்றீங்களா?"

கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"

மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"

கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"

மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"

கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"

மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"

கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"

மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!"

கணவன்: "Ok! நானும் போகலை. போதுமா?"

மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை blame பண்றீங்க!"

கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"

மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"

வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை! டயர்டாகி படுத்துவிட்டான்.

திருமணமான ஆண்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்!

Good night

Thursday, 14 April 2016

காலம் கனியும்வரை காத்திருக்க வேண்டும் -பெரியோர் வாக்கு .காத்திருந்தால் காலம் கடந்துவிடும் -இதுவும் பெரியோர் வாக்கு .
இந்த முரண்பாட்டுக்கு விடை -
வள்ளுவர் வாக்கு ~~
ஒடு மீன் ஓட உறு மீன் வரும்வரை வாடி இருக்க்குமாம் கொக்கு
அர்த்தம்: காலம் கனியும்வரை காத்திருந்து கனிந்தவுடன் அதனை  சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் .


Thursday, 7 April 2016

☎📞☎📞☎📞☎📞☎📞
 மாதா அமிர்தானந்தமயி சொற்பொழிவாற்றும் போது கூறிய குட்டி கதை..!!

ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார். ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன். நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி.  மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான். நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன். வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். நாம் செய்யும் தவறை மற்றவர்கள் செய்தால் நமக்கு அதிர்ச்சியாகிறது. மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும்.

இந்த குட்டிக்கதையை மாதா அமிர்தானந்தமயி கூறினார்.
Good night

Wednesday, 30 March 2016

சில வேண்டும்கள்....

நடந்ததை சொல்ல கால்கள் வேண்டும் !
கேட்டதை சொல்ல காதுகள் வேண்டும் !
பார்த்ததை சொல்ல கண்கள் வேண்டும் !
கொடுத்ததை சொல்ல கைகள் வெண்டும்!
தூங்கியதை சொல்ல தோள் வேண்டும் !
விழித்ததை சொல்ல விரல்கள் வேண்டும் !
உண்டதை சொல்ல உதடுகள் வேண்டும் !
மகிழ்ச்சியை சொல்ல மடி வேண்டும் !
இவை அனைத்தையும் செய்ய ஆயுள் வேண்டும் !
அதற்கு எப்பொழுதும் உங்கள் அன்பு வேண்டும் .......!

Friday, 25 March 2016

💘காதல் தத்துவம்💞

பஞ்சர் போடாத டயரும் மேக்கப் போடாத பிகரும் ரோட்ல போனதா சரித்திரம் இல்ல
😄😄😄😄😄😄😄
பாச கயிற வீசுற எமனும் பார்வைய வீசுற வுமனும் பால் ஊத்தாம போனதா சரித்திரம் இல்ல
😄😄😄😄😄😄😄
கடவுள் காதலித்தால் அது புராணம் மனிதன் காதலித்தால் அவனுக்கு மயானம்
😄😄😄😄😄😄😄
ஊரில் அதிகமா தண்ணீர் பிடிக்கும் பொண்ணும் பாரில் அதிகமா தண்ணி அடிக்கும் ஆணும் சண்டை போடாம வீட்டுக்கு வந்ததா சரித்திரம் இல்ல
😄😄😄😄😄😄😄
கொதிக்கிற தண்ணியில பிம்மத்த பாக்க முடியாது... கோபத்துல இருக்குற பிகர் கிட்ட அன்ப எதிர்பாக்க முடியாது
😄😄😄😄😄😄😄
மழையில நெனஞ்ச மண்ணும் மனசுல நெனச்ச பொன்னும் கண்டிப்பா ஒரு நாள் கால வாரி விடும்
😄😄😄😄😄😄😄
நின்ன இடத்துல சுத்துனா கடிகாரம்ன்னு அர்த்தம் ஆனா நிக்க முடியாம சுத்துனா குடிகாரன்னு அர்த்தம்
😄😄😄😄😄😄😄
கல்லால் அடிபட்ட நாயைவிட காதலால் அடிப்பட்ட BOY தான் அதிகம்
😄😄😄😄😄😄😄

Saturday, 12 March 2016

க🌺🌺💐💐💐🌺🌺
🌹வெற்றிப்பாதை!!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்!
🌺🌺💐💐💐🌺🌺
👍கனவு நிறைவேறும்வரை கலைத்து விடாதே முயற்சியை ஏனெனில்..
🌺🌺💐💐💐🌺🌺
👉🏾முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்!
🌺🌺💐💐💐🌺🌺
🌹வெற்றிப்பாதை!!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்!
🌺🌺💐💐💐🌺🌺
👉முயல்வோம்..
வெற்றி பெறுவோம். 🌺🌺💐💐💐🌺🌺

Wednesday, 10 February 2016

அம்மி மிதிச்சி அருந்ததி பாத்து கல்யாணம் பண்ண
   -  Arrange marriage.    

மம்மி மிதிச்சி டாடி உதைச்சு
கல்யாணம் பண்ண
   -  love marriage.
        Advance lover's day my dear sweet friends