Followers

Followers

Wednesday, 14 December 2016

ஹா.......ஹா.....

பிள்ளையாரு ஸாமிக்கு கல்யாணத்துக்கு ஏன் பொண்ணுகெடைக்கு...மாட்டேங்குதுன்னு கொஞ்சம்  மாத்தி யோசிச்சு போட்டோம்ல...
அது வேற ஒன்னுமில்ல.... அவரால் எந்த பொண்ணுக்குமே   "உம்மா".....கொடுக்க முடியாதுல்ல.....))))))

 ஒரு படிக்காத மேதை தன் மகனாவது நல்லா படிச்சு முன்னுக்கு வரணுமினு கான்வெண்டுல சேர்த்தாங்க...
ஒருநாள்   ஹோம் ஒர்க்ல.. நீர்யானைக்கு இங்கிலீஷுல என்னா சொல்லணுமனு மகன் கேட்டிருக்கான்... இவுகதான் படிக்காத மேதாவி ஆச்சே ரொம்பவே யோசிச்சு போட்டு   நீர் னா  வாட்டர்...யானைன்னா எலிஃபெண்டு  ஸோ.... வாட்டர் எலிஃபெண்டுனு சொல்லி போட்டாருல்லா....)))))

Tuesday, 13 December 2016

வங் "கி"" அவள்...

😃😜பேங்க் வாசலில் ஒரு வாரம் காத்துக் கிடந்த வாலிபனுக்கு சிந்தனையில் உதித்த கவிதை👨‍❤️‍👨
💐அவள் கன்னம் கனரா வங்கி..
👁👁கண்களோ கரூர் வைஸ்யா..
👄பற்களில் அவள் பஞ்சாப் நேஷனல்...
😃இடுப்போ இந்தியன் ஓவர்சீஸ்..
🌹நகங்கள் நபார்டு வங்கி..
💋இதழ்கள் இந்தியன் வங்கி..
💃மெல்லிடையோ மெர்க்கன்டைல்
😁அவள் முத்து சிரிப்போ முத்ரா வங்கி..
👁பார்வையிலவள் பாரத வங்கி😳
👰தேகமோ தேனா வங்கி..
😡மொத்தத்தில் சில்லறைக்காக என்னை வரிசையில் நிற்க வைத்த ரிசர்வ் வங்கி அவள்..😬😭

Wednesday, 7 December 2016

அழைப்பு...

நம் அனைத்து வலைப்பதிவர்களின்  அன்புக்கும்  பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு வை. கோபாலகிருஷ்ணன் ஸாரின் பிறந்த தினம்...8---12-  2016..
 நாம் அனைத்து வலைப்பதிவர்களும் அவர்களை வாழ்த்தி வணங்கி ஆசி பெற இங்கே வருக  வருக என்று அன்புடன் அழைக்கிறேன்

 இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்  கோபால் ஸார்

Tuesday, 6 December 2016

அஞ்சலி

ஆயிரம் பேர் இருந்தும்
ஆயிரம் கோடி பணமிருந்தும் அத்தனை அதிகாரங்களும் விரல் நுனியில் இருந்தும்!

ஒரு கையளவு காற்றுக்காக
அந்த இதயமும் நுரையிரலும் எத்தனை எத்தனை ஏக்கங்களோடு
தவித்துக்கொண்டிருக்கும்!!

நினைச்சுப்பார்த்தால்
இந்த வாழ்க்கையில்
எதுவுமே பெரிசில்லை

கிடைத்த வாழ்க்கையை நிம்மதியாக, சந்தோஷமாக வாழுங்கள் - வாழ விடுங்கள்!!!

ஆழ்ந்த இரங்கல்கள்

Tuesday, 22 November 2016

முழுபூசனி......சோறு...

‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சுசாப்பிட்டாங்களாம். ஊரில் அரசால் புரசலாக பணக்காரர் பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ளஆரம்பித்தார்களாம். இதை மறைக்க ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம். “இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும் இவரா கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது” என்று பேசிக்கொண்டார்களாம். இதுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை....😂😂

Thursday, 17 November 2016

👲🏻அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேனும்ன எதாவது கேட்டு பாரு

👱🏻இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?

👲🏻அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா !😆😆😆😆😆😆😂😂😂😂😂😂😂