தன்னம்பிக்கை.
ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன. இரை தேட போகும் போது இருவரும் ஒன்றாகவே செல்வார்கள்.
செவ்வெறும்புக்கு உணவு கிடைக்காத நாளில் கட்டெறும்பு தனக்கு கிடைத்த உணவை கொடுத்து உதவும். அது போலவே பதிலுக்கு செவ்வெறும்பும் கட்டெறும்புக்கு உதவும்.
ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இ;ருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன.
இரண்டு எறும்புகளும் பசியாக இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடிரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்;தழிக்க ஆரம்பித்தன.
‘ நண்பா இப்படி வந்து தண்ணீல விழந்துட்டோமே. இப்ப என்ன பண்றது’ என்றது செவ்வெறும்பு.
‘நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும். அது வர நீந்திட்டே இருப்போம்’ என்றது கட்டெறும்பு.
நேரமாகி கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின.
‘நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்க தான் போகிறேன்;’ என்றது செவ்வெறும்பு.
‘இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு.
‘இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நான் சாக தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது’ செவ்வெறும்பு.
எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு. ஒரு கட்டத்தில
//எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு. ஒரு கட்டத்தில//
ReplyDeleteதொடருமா? அவ்வளவு தானா? எனத் தெரியாமல் அந்தக்
கட்டெறும்பு போல நானும் ஒரே தவிப்புடன்.......
ஹா ஹா.... தொடரும் போட மறந்தேனே...
ReplyDelete