Followers

Followers

Friday, 11 November 2016

மார்க் ஸுக்கர் பெர்க்கு....

Mark Zuckerberg-க்கு ஒரு திறந்த மடல்,

ஏலே யெய்யா மார்க்கு, நல்லாருக்கியா? அதுசரி, நீ நல்லா இல்லாம வேற யாரு நல்லாயிருப்பா? நீ எந்த நேரத்துல எலவு இந்த பேஸ்புக்கை ஆரம்பிச்சியோ, அப்பத்துல இருந்து பிரச்சனை மேல பிரச்சனை. ஹிலாரி கிளிண்டன்ல இருந்து கீர்த்தி சுரேஷ் வரைக்கும் யாரையும் விட்டு வைக்க மாட்றாய்ங்க. புரோட்டா வாங்கி குடுத்து பொறனி கேட்குற மாதிரி அம்பானி ஆளுக்கொரு ஜியோ சிம் குடுத்து அடிச்சுக்கிட்டு சாவுங்கடானு சொல்லீட்டு போயிட்டாரு. சிவகார்த்தி அழுதா இவிங்களுக்கு என்ன? என்னம்மோ இவிங்களுக்கு அவரு கால்சீட் குடுத்த மாதிரி ஆளாளுக்கு கிடந்து கதறுறாய்ங்க. தமிழக முதல்வர் அம்மா.... சரி வேணாம், உளவுத்துறை டிரேஸ் பண்ணும். இதுல மகிழ்ச்சி என்னன்னா, அம்மஞ்சல்லிக்கு தேறாதவன்னு சொந்த வீட்டுலயே தண்ணி தொளிச்சு விட்ட எங்கள உளவுத்துறை கண்காணிக்கிறது எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா மார்க்கு?  

ஊருல மழை தண்ணி இல்ல. ஆனா எல்லாரு கையிலையும் 4ஜி போன் இருக்கு. காவிரி இருந்து தண்ணி வரலைனா கூட கோவம் வர மாட்டுது. ஆனா 4ஜில நெட் ஸ்பீடு கொறஞ்சா நரம்பு புடைச்சு கோபம் தலைக்கேறுது. முன்ன மாதிரி சொந்தகாரன் எவன் வீட்டுக்கு போறதில்லை. அதுக்கு பதிலா சொந்தக்கார பயலுகளுக்கு ஃபிரண்டு ரெக்வஸ்டு கொடுத்து ப்ரண்டாக்கிட்டேன். ப்ரண்டுங்குற வார்த்தைக்காவது இனி அவிங்க உண்மையா இருப்பாய்ங்களானு பாப்போம்.

திருட்டு டிவிடில படம் பாத்துட்டு நாங்க எழுதுற விமர்சனத்துல தமிழ் சினிமாவே பயந்து போய் கெடக்கு. முன்னாடியெல்லாம் வானத்துல ஹெலிகாப்டர் பறந்தா குடிக்கிற கஞ்சியை தட்டி விட்டுட்டு வௌிய வந்து வானத்தை பார்த்த தான் வயிறே நிறையும். இப்ப வானத்துல காக்கா பறந்தாலும் அண்டை நாட்டு சதினு ஒரு ஸ்டேடஸ் போட்டா தான் மனசே நிறையுது.

 தெருவுல கஞ்சா குடிச்ச பயலுக எல்லாம் இங்க போராளியா மாறி போய்ட்டாய்ங்க! வெறச்சுக்கிட்டு திரிஞ்ச அரசியல்வாதிங்க இங்க காமெடியனா நாறிட்டாய்ங்க. கொலை செஞ்சத கூட செல்பியா போட்டு லைக் அல்றாய்ங்க! கமெண்டுல அடுத்த கொலை எப்பனு சொல்றாய்ங்க.

அனேகமா இன்னும் பத்து வருஷத்துல இங்க திரியிற கொள்ளப்பயலுக ஜெயில்ல தான் இருபாய்ங்க. அனேகமா ஜாமீன் எடுக்க நீ தான் வரணும். ஏன்னா நீ எங்க பணத்தை மட்டும் திங்கல, நேரத்தையும் சேத்து முழுங்கிருக்க!

-இப்படிக்கு உன் முகநூலால் அப்பாவித்தனத்தை தொலைத்து விட்டு சூதுவாதோடு திரியும் தமிழன்!

1 comment:

  1. //காவிரி இருந்து தண்ணி வரலைனா கூட கோவம் வர மாட்டுது. ஆனா 4ஜில நெட் ஸ்பீடு கொறஞ்சா நரம்பு புடைச்சு கோபம் தலைக்கேறுது.//

    கரெக்டூஊஊஊ. இதில் சொல்லியுள்ள எல்லாமே கரெக்டூஊஊஊ.

    //ஏன்னா நீ எங்க பணத்தை மட்டும் திங்கல, நேரத்தையும் சேத்து முழுங்கிருக்க!//

    :)))))

    ReplyDelete