கட்டத்தில் கை, கால்கள் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. இனி நம்மால் முடியாது. செத்து போய் விடுவோமோ என்று தோன்றியது.
‘செத்து போவதுக்காகவா பிறந்தாய். வாழ்க்கைனாலே பிரச்சனைகள் நிறஞ்சது தான். அதுக்கு பயந்தா வாழ முடியாது. அதனால துணிச்சலோடு போராடு’ என்று சொன்னது உள்மனசு.
கட்டெறும்பு துணிச்சலோடு போரட தொடங்கியது. சிறிது நேரம் கழித்து காற்று அடிக்க மரத்திலிந்து ஒரு இலை கட்டெறும்பு பக்கதில் விழுந்தது. உடனே கட்டெறும்பு இலையில் ஏறி அமர்ந்து அதை படகாக பயன்படுத்தி கரையேறியது.
இதை பார்த்த குளத்தில் இருந்த மீன் கட்டெறும்பை பார்த்து சொன்னது
‘நீ துணிச்சலோடு விடாமல் போரடினாய் அதனால் வென்றாய். வாழத்துக்கள் நண்பா’.
நண்பர்களை.
பயந்து வாழாமல் துணிச்சலோடு போராடினால் வெல்லலாம் என்பதை இந்த கதை உணர்த்திகிறது
ஆஹா, காற்றடிக்க, மரத்திலிருந்து ஓர் இலை எறும்பின் அருகே விழ, அதனைப் படகு போல உபயோகித்து அந்த எறும்பு தப்பித்துள்ளது.
ReplyDeleteஅதுவரை நீரில் மூழ்காமல் தத்தளித்த அந்த எறும்பு துணிச்சலுடன், தன் உயிருக்காகப் போராடியுள்ளது.
மிகச்சிறிய கட்டெறும்பு போன்ற நீதிக்கதைக்கும், பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.