Followers

Followers

Wednesday, 2 November 2016

கலர் போகிறது




ஒரு நாள், காதர் பாயின் இடது கால் நீல
நிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில்
உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு
சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை
கேட்டார். பரிசோதனை செய்து விட்டு
காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை
அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி
அடைந்த காதர் பாய் தயக்கத்துடன் வேறு
வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக்
கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது
காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே
மருத்துவமனைக்கு சென்றார். வலது
காலிலும் விஷம் ஏறி விட்டது என்று
சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும்
என மருத்துவர் சொல்லி விட, நொந்து போன
காதர் பாய் அதற்கும் ஒத்துக் கொண்டார். இரு
கால்களையும் இழந்து, கட்டை கால்களுடன்
நடமாட ஆரம்பித்த பாய்-க்கு சில
நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.
கட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட,
பதற்றத்துடன் மருத்துவரை அணுக,
மருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம்
எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும்
ஆரம்பத்தில் இருந்து அனைத்து வகையான
உடல் பரிசோதனைகளையும் முடித்த பின்
மருத்துவர் சொன்னார், "காதர் பாய், உங்கள்
லுங்கி சாயம் போகிறது, மன்னித்து
விடுங்கள்"..

இதுதான் இன்றய *மருத்துவர்களின் நிலை.. சிரிப்பதற்கல்ல...*

*சிந்திக்க...*




2 comments:

  1. மருத்துவர்களின் நிலையும் இப்படிச் சாயம் போய் உள்ளதே.

    சிந்தித்தேன். இது என்ன கொடுமை என நினைக்கத் தோன்றியது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. எல்லா மருத்துவர்களையும் அப்படி சொல்லி விட முடியாதே.. சில நல்லவங்களும் இருக்காங்களே...

    ReplyDelete