Followers

Followers

Tuesday, 28 February 2017

படிப்பு..


விருந்தாளி :- என்ன பண்ற

பையன் :- படிக்கிறேன்

விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ?

பையன் :- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்

விருந்தாளி :- என்னன்னு ?

பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு

விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ?

பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம்

விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி

பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம்

விருந்தாளி :- அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி

பையன் :- டாக்டர் தொழில்ல பத்துவருட வருமானம் 500 லட்சம்

விருந்தாளி :-அடேயப்பா அப்ப டாக்டருக்கு படி

பையன் :- ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் பத்து வருட வருமானம் 700 லட்சம்

விருந்தாளி :- பார்ரா ... நீ நல்லா படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர முயற்சி பண்ணு

பையன் :- எதுவுமே படிக்காத ஒரு அரசியல்வாதியின் பத்து வருட வருமானம் 1117கொடியிலேர்ந்து 40000கோடி வரை

விருந்தாளி :-.....!!! மயங்கி விழுகிறார்

பையன் :- -நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு..

இதான் இந்த உலகம்..
இது சிரிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்ல..
சிந்திக்க வேண்டிய விஷயம்...

Sunday, 26 February 2017

தமிழ் நாடு..



ஒரு தோட்டத்தில் நிறையக் குரங்குகள் இருந்தன.
பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.
குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.
''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.
வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.
''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.
தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்தால், விளைவு மோசமாகவே இருக்கும்...
😬😁😂😬😁😂😬😁😂
இது மாதிரி தான் தமிழ்நாடு அரசியல் இப்போ இருக்கு


தமிழ் நாடு..



ஒரு தோட்டத்தில் நிறையக் குரங்குகள் இருந்தன.
பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.
குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.
''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.
வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.
''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.
தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்தால், விளைவு மோசமாகவே இருக்கும்...
😬😁😂😬😁😂😬😁😂
இது மாதிரி தான் தமிழ்நாடு அரசியல் இப்போ இருக்கு


மாமனார்

என்னை போல 90% பசங்களின் அதிகபட்ச ஆசையே இம்புட்டுதானுங்க...

1..இரண்டு பெட்ரூம் ஓட ஓர் வீடு..
2..4 ஏக்கர் விவசாய நிலம்..
3..2 ஏக்கர் ல தென்னந்தோப்பு ..
4..ஸ்கார்பியோ
5..அன்பான மனைவி,அழகான இரு குழந்தைகள்..
6..அளவா வருமானம் வந்தாலும் சொந்தமா ஒரு தொழில்
7..கஷ்ட காலத்தில் தோள் கொடுக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்..
8.. 2நாட்டு மாடு மற்றும் ஒரு காங்கேயம் காளை..
9..ஒரு *Yamaha RX100* பைக்
10..நாலு பேர் மதிக்கும் படியான வாழ்க்கை..
.
.
.
.
11.இதையெல்லாம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.கொடுக்க நல்ல *மாமனார்* 😜😜

.
சிரிக்க மட்டும்😳😂😂
.
சண்டைக்கெல்லாம் வர கூடாது ஆமா😃

Friday, 24 February 2017

நை ஸ் லைன்ஸ்


Nice line...

தானாக உயரும்
*வயது*!
விடாமல் துரத்தும்
*காலம்*!!
தடுக்க முடியாத
*நேரம்*!!!
கடக்கத் துடிக்கும்
*இளமை*!!!!
காலைத் தடுக்கும்
*சமூகம்*!!!!!
தொடவேண்டிய
*இலக்கு*!!!!!!
இத்தனை போராட்டம் தான்
வாழ்க்கை....

Wednesday, 22 February 2017

மிருக. வதை..


ஐயா, யாரிடம் வந்து மிருகவதை பற்றி பாடம் எடுக்கிறீர்கள் !!

யானையை பிள்ளையாராய் பிடித்து
சேவலை முருகன் கொடியில் வைத்து
காளையை நந்தியாக அமர்த்தி
பசுவை கோமாதாவாக வணங்கி
சிங்கத்தை சக்தியின் வாகனமாக்கி
புலியை ஐயப்பனின் நண்பனாக்கி
பாம்பை சிவனுக்கு மாலையாக்கி
கருடனை பெருமாளின் மகிழுந்தாக்கி
எருமையை எமனின் தேராக்கி
குரங்கை அனுமனாக கும்பிட்டு
நாயை பைரவனாக பார்த்து

கும்பிடும் கூட்டமய்யா நாங்கள் !!

Tuesday, 21 February 2017

இந்தியன்



British: Can u Swim?
Indian: No
British: Then a Dog is Better den u because It Swims.
Indian: Can u Swim?
British: Yes! ஸ்ரீ
Indian: Then What's the Difference between u & Dog…
British Shocked, Indian Rocks! 👍 😜 😂 . . .
Britisher : Y u indians differ in colors, look we R all white..?
Indian: Horses r in different colors but donkeys r all the same..!



Monday, 20 February 2017

இடுக்கண். வருங்கால்.. நகுக....


😅 சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் 😅
😅 ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....??? 😅😅😅
😅
😅 ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான் 😅😅😅
😅
😅 ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்.... 😅😅😅
😅 மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்... 😅😅😅
😅
😅 டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!! முதல் உதவி என்ன செஞ்சீங்க....??? 😅😅😅
😅 வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்....!!! 😅😅😅
😅
😅 கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???'' 😅😅😅
😅 டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்......??? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே....!!!'' 😅😅😅
😅
😅 "மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்....???" 😅😅😅
😅 "அது.... குருவி....!!!" 😅😅😅
😅
😅 ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே....??? உங்களுக்குத் தெரியுமா.....??? 😅😅😅
😅 நண்பர்: தெரியுமாவாவது....??? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன். 😅😅😅
😅
😅 பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை." 😅😅😅
😅 வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது." 😅😅😅
😅
😅 ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்...??? 😅😅😅
😅 ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு....??? 😅😅😅
😅
😅 (பரீட்சை ஹாலில்)
😅 ரகு : வயித்தைக் கலக்குதுடா.
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா...??? 😅😅😅
😅
😅 முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்...??? 😅😅😅
😅 ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்.....!!! 😅😅😅
😅
😅 வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்.....!!! 😅😅😅
😅 கடைக்காரர்: சாரி சார்....!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லியே...!!! 😅😅😅
😅
😅 இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான் 😅😅😅
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான் 😅😅😅
😅
😅 "கடலை எண்ணெய் என்ன விலைங்க...???" 😅😅😅
😅 "நூத்தி இருபது ரூவா"
😅 "எப்போ குறையும்?"
"அளந்து ஊத்தும்போதுதான்...." 😅😅😅
😅
😅
😅
😅😅😅😅😅😅😅சிரிங்க சிரிங்க சிரிச்சுட்டே தூங்குங்க 😅😅😅😅😅😅😅😅😅

Sunday, 19 February 2017

பொள்ளாச்சிக்காரன்..



👉💞👈நள்ளிரவு நேரம்......கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று ஊர் boyz பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

1. திண்டுக்கல்காரன்

2. திருச்சிகாரன்

3. பொள்ளாச்சிகாரன்

திடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது. மூன்று பெரும் நடுங்கி
போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது.

"உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்" என்றது. மூன்று பேரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. "உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன்.

அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போட வேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள்
தோற்று போனதாய் அர்த்தம்.

"மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்...
திண்டுக்கல்காரன் கையில் போட்டிருந்த
மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.
திருச்சிகாரன் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.

பேய் சிரித்தது.....

"இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?"

உடனே பொள்ளாச்சிகாரன் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு ...

"இந்த தண்ணீரை கொண்டு வா!" என்றான்....பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.

நீதி: இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்'க்கே தண்ணி காட்டுபவர்கள் பொள்ளாச்சிகாரன் மட்டும் தான்.,😀😄.....



Saturday, 18 February 2017

மெண்டல்....



🏥மனநல மருத்துவமனை🏥

மென்டல் : டாக்டர், நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்..

டாக்டர் : அப்படியா!
எங்க அந்தக் கதைய சொல்லு..

மெண்டல் : முதல் பக்கம், ஒரு ராஜா குதிரை மேல ஏறி பக்கத்து நாட்டுக்கு போறாரு....

டாக்டர் : ம்ம்ம் அப்பறம்...

மெண்டல் : கடைசி பக்கம், அந்த ராஜா பக்கத்து நாட்டுல போய் இறங்குறாரு...

டாக்டர் : அப்போ மிச்ச 498 பக்கம் என்ன டா கதை...?

மெண்டல் : ராஜா குதிரைல போறாரு..... டக்...... டக்..... டக்..... டக்..... டக்............... டக்.......
டக்................. டக்................... டக்....................................டக்
டக்...........................................................டக்..............................
.......................டக்................................................
...................................
...................................
..........
டக்........டக்.........டக்..........டக்..........டக்...........டக்.

டாக்டர் : டேய்...
இதெல்லாம் ஒரு கதையாடா.... இத எவன் டா படிப்பான் மெண்டலு...

மெண்டல் : டாக்டர் இத whatsap la போடுங்க அங்க நெறைய மெண்டல் இருக்காங்க.... இதெல்லாம் அவங்க படிப்பாங்க. இப்ப கூட ஒரு மெண்டல் படிச்சுட்டு சிரிச்சுட்டிருக்கு.....

😁😁😁😁😁😁😁😁😁😁😁

Thursday, 16 February 2017

பத்தாது மனிதன்..



*தினந்தோறும் பார்க்கும் எதார்த்தம்*
கடவுள் வந்தார்...!
“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”
இரண்டாம் மனிதன்: “நான்  உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”
மூன்றாம் மனிதன் : “உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”
நான்காம் மனுஷி: “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி.. இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்: “உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

“ *மனநிம்மதி, மன நிறைவு*… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால்  மனநிறைவு கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து : "நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..  சிறிது  நேரம் கழித்து வருகிறேன்..”  என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது,
அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த
பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே,
அந்த இடத்திலேயே,
அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!

பத்தாவது மனிதன்,
கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம்
*பத்தாவது* மனிதனா..?
இல்லை
*பத்தாது* என்கிற மனிதனா..?
முடிவு எடுங்கள்..
*எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.* 🍒


Wednesday, 15 February 2017

நலம் நலமறிய ஆவல்



ஒரு பெண்மணிக்கு மும்பையில் வேலை கிடைத்தது பெண்மணியும் தனியாக சென்று வேலையில் சேர்ந்தாள். அவளுக்கு தங்குவகற்கு வசதியான வீடும் கொடுத்தார்கள். அவள் இந்த விபரத்தை தன் கணவணுக்கு தெரிவிப்பதற்காக மொபைல் மூலம் SMS feed செய்து அனுப்பினாள். SMS தவறுதலாக கணவணுக்கு பதில் வேறொறு நபருக்கு சென்று விட்டது. அந்த மணிதர் அப்பொழுது தான் தண் இறந்து போன மணைவிக்கு இறுதி மரியாதைகளை செய்து விட்டு வந்தார். அவர் அந்த SMS ஐ படித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ளHOSPITALல் ADMIT செய்தனர். அந்த SMSல் கீழே உள்ளபடி எழுதி இருந்து. நான் இங்கு நல்ல படியாக வந்து சேர்ந்தேன். தங்குவதற்கு வசதியான இடமும் கிடைத்துள்ளது. நீங்கள் எண்ணை பற்றி கவலை பட வேண்டாம். முடிந்தால் இரண்டொரு நாட்களில் உங்களையும் அழைத்து கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் மணைவி




நலம் நலமறிய ஆவல்



ஒரு பெண்மணிக்கு மும்பையில் வேலை கிடைத்தது பெண்மணியும் தனியாக சென்று வேலையில் சேர்ந்தாள். அவளுக்கு தங்குவகற்கு வசதியான வீடும் கொடுத்தார்கள். அவள் இந்த விபரத்தை தன் கணவணுக்கு தெரிவிப்பதற்காக மொபைல் மூலம் SMS feed செய்து அனுப்பினாள். SMS தவறுதலாக கணவணுக்கு பதில் வேறொறு நபருக்கு சென்று விட்டது. அந்த மணிதர் அப்பொழுது தான் தண் இறந்து போன மணைவிக்கு இறுதி மரியாதைகளை செய்து விட்டு வந்தார். அவர் அந்த SMS ஐ படித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ளHOSPITALல் ADMIT செய்தனர். அந்த SMSல் கீழே உள்ளபடி எழுதி இருந்து. நான் இங்கு நல்ல படியாக வந்து சேர்ந்தேன். தங்குவதற்கு வசதியான இடமும் கிடைத்துள்ளது. நீங்கள் எண்ணை பற்றி கவலை பட வேண்டாம். முடிந்தால் இரண்டொரு நாட்களில் உங்களையும் அழைத்து கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் மணைவி




Tuesday, 14 February 2017

ரொம்ப கஷ்டம்பா...


லவ்,பண்றதுலாம் ரொம்ப கஷ்டம் பாஸ் ......!!
.
அவங்ககிட்ட ...
பேசிடே இருந்தா ,போடா " torcher " னு ,சொல்வாங்க...
பேசாம இருந்தா ,போடா " waste "ன் வாங்க ...!
.
*.மொரச்சா ,"கெட்டவன் "...
.சிரிச்சா ,"பல்"ல காட்றவன் ..
.
*. Di .. போட்டு ,பேசுனா .."limit ha cross panravan "..
...பேசாம ,இருந்தா .." டம்மி " பீஸ் " ...
.
*..தப்பா ,பேசுனா ," கெட்டவன் " ...
.." decent" ,ha ..பேசுனா .." tube light "....
.
*..சண்டை ,போட்டதும் ..போனாபோதுனு ,நம்பளே ,போய் ...பேசுனா .. " சொரனகெட்டவன்" ...
..பேசலனா .." Ego "..பிடிச்சவன்...
.
*..பையன் ..வேற பொண்ணுகிட்ட ,,பேசுனா .."துரோகமாம்" ..
..அதே ..பொண்ணுங்க ,வேற .பசங்க ,கிட்ட ..பேசுனா ... "Just friend" .. ஆம்....
..
.. ..பசங்கள... ஆண்டவன் .தான் ,,காபாத்தணும் ....
..........................................




Monday, 13 February 2017

வாலண்டைன் டே..



Girl:காதலர் தின வாழ்த்து அட்டை இருக்கா

Shoper:இருக்கு மேடம்

Girl:நா உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன் னு இருக்கா

Shoper:இருக்கு மேடம்

Girl:ஒரு 12 கொடுங்க
🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
good morning..

Sunday, 12 February 2017

சிற்பம்


தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.

திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லைஎன்றால் அந்த சிங்கம் திண்றுவிடும்"

அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும் செய்யாதது"

மகள் அப்பாவிடம் "சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால் கடவுளின் சிற்பம் நமக்கு என்ன செய்யும்"

தந்தையிடம் பதில் இல்லை..........

படித்ததில் பிடித்தது



Thursday, 9 February 2017

சசி வர்ணம்...


அர்ச்சகர்: சுக்லாம் ப்ரதம்
விஷ்ணும் சதுர்புஜம்
சசி வரணும்
சசி வரணும்
சசி வரணும்..

பக்தர்: சுவாமி சசி வந்தாச்சு..
அடுத்த மந்திரத்த சொல்லுங்கோ

தமிழ்நாடு ஸ்வாகா ☹☹☹☹



Wednesday, 8 February 2017

ஹெட் மாஸ்டர்



ரசித்துச் சிரித்தேன்...

ஒரு பெண் தன தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவளைக் காண அவளது தோழன் வருகிறான்.

உடனே அந்த பெண் அவனிடம்," நீ பாமுக் எழுதிய,"அப்பா வீட்டில் இருக்கிறார்" என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தியா?" என்று கேட்கிறாள்.

உடனே அவன் அந்த பெண்ணிடம்,"இல்லை நான் ஹும்ம்ஸ் எழுதிய "நான் எங்கே காத்திருப்பது உனக்காக ? என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தேன்" என்கிறான்.

உடனே அந்த பெண்,"என்னிடம் அந்த புத்தகம் இல்லை, எனவே நீ என்னிடம் உள்ள.. கிரிஷ் எழுதிய "மாமரத்துக்கடியில் காத்திரு" என்ற புத்தகத்தை பெற்று கொள்" என்கிறாள்.

உடனே அவன் அந்த பெண்ணிடம், நீ நாளை பள்ளிக்கு வரும் போது... "ஐந்து நிமிடத்தில் உன்னை அழைக்கிறேன்'' என்ற ரிடெய்ல் மேனேஜ்மென்ட் புத்தகத்தை கொண்டு வா என்கிறான்.

உடனே அந்த பெண் அவனிடம், பகத் எழுதிய "நான் உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்ற புத்தகத்தையும் உனக்கு கொண்டு வருகிறேன் என்கிறாள்.

உடனே அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணிடம், "இவன் இவ்வளவு புத்தகத்தையும் படிப்பானா?" என்று கேட்கிறார்.

உடனே அந்த பெண்," ஆமாம் அப்பா, அவன் மிகவும் அறிவும், புத்தியும் மிகுந்தவன்" என்று கூறுகிறாள்.

உடனே பெண்ணின் தந்தை கூறுகிறார்..," நீ அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய "வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை" என்ற புத்தகத்தையும் மறக்காமல் குடு என்கிறார்.

நீதி : அடேய்.. நீ LKG படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா...

Tuesday, 7 February 2017

நான்யார்...












🌷 *நான் யார்* 🌷
ஜீவன்.

ஜீவன் என்றால்..?
ஆத்மா+அனாத்மா இவ்விரண்டும் இணைவது ஜீவன்......!!!

அனாத்மா என்றால்....???
மூன்று உடல்
ஐந்து கோசம்
மூன்று அவஸ்தை
இதுவே அனாத்மா......!!!

மூன்று உடல் என்றால்......???
காரண உடல்
சூட்சும உடல்
ஸ்தூல உடல்
மூன்றும் இணைந்தது.....!!!

காரண உடல் என்றால்.....???
ஆத்மா சார்ந்து நோக்கத்தினை வெளிபடுத்துவது......!!!

சூட்சும உடல்....???
மிக நீண்ட விளக்கமுள்ளது..,
சுருக்கமாய் ருசி. கேட்டறியும் திறன்., பார்வை.., வாசனை.., மனம், புத்தி இது போன்ற கண்ணுக்கு தெரியாத சக்தி, உடல் உணரக்கூடிய காந்த சக்தி........!!!

ஸ்துல உடல்......???
நீங்கள் கண்ணால் காணும் உடல்.......!!!

நான்
உடலல்ல
மனமல்ல
நான்
ஆத்மா......!!!

ஆத்மா என்றால்......???
உண்மையாகவும்
நிரந்தரமாகவும்
உள்ள அறிவாற்றல், அந்த அறிவாற்றலே இறையாற்றல், இதைஉணர்ந்து கொண்டால் நானே ஏகம் என்ற உண்மை விளங்கும்......!!!

வாழ்க வளமுடன்



Monday, 6 February 2017

தர்மம் தலை காக்கும்..




படித்ததில் பிடித்தது:

இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.

அவன் முனகியது, இதுதான்:
" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்.

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே.





Wednesday, 1 February 2017

ஏழ்மை....

ஒரு பணக்காரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்கக் கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்துச் சென்றான். இரு தினங்கள் தங்கிவிட்டுப் பின்னர் வீட்டிற்குத் திரும்பினதும் #ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான்...
அப்பா நம் வீட்டில் ஒரேயொரு நாய் இருக்கிறது, கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம், அந்த கிராமத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது. நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது, அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது. நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம், அவர்கள் உடனடிப் பாலைக் கறந்து சாபிடுகிரர்கள். நாம் வாடிய காய்கறிகளைச் சாப்பிடுகிறோம், அவர்கள் செடியில் இருந்து பறித்துப் பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிறார்கள் . நாம் வீட்டைச் சுற்றி மதில் கட்டிப் பாதுகாக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிக்கொண்டே சென்றான்...
மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது.. தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று...
ஏழ்மை என்பது நம் எண்ணத்திலேயே குடி கொண்டால் என்னதான் வசதி கிடைத்தாலும் ஏழ்மையிலுருந்து விடுதலை கிடைக்காது...!

கடவுளே.....

👳கணவன் : என்ன சமைச்சிருக்கே?
சாணி மாதிரி இருக்கு. நல்லாவேயில்ல.
.
.
.
👩மனைவி : கடவுளே! இவர் இன்னும்
என்னவெல்லாம்
சாப்பிட்டு பார்த்திருக்காரோ தெரியலையே!😜😜😜😜😜