Followers

Followers

Wednesday, 22 February 2017

மிருக. வதை..


ஐயா, யாரிடம் வந்து மிருகவதை பற்றி பாடம் எடுக்கிறீர்கள் !!

யானையை பிள்ளையாராய் பிடித்து
சேவலை முருகன் கொடியில் வைத்து
காளையை நந்தியாக அமர்த்தி
பசுவை கோமாதாவாக வணங்கி
சிங்கத்தை சக்தியின் வாகனமாக்கி
புலியை ஐயப்பனின் நண்பனாக்கி
பாம்பை சிவனுக்கு மாலையாக்கி
கருடனை பெருமாளின் மகிழுந்தாக்கி
எருமையை எமனின் தேராக்கி
குரங்கை அனுமனாக கும்பிட்டு
நாயை பைரவனாக பார்த்து

கும்பிடும் கூட்டமய்யா நாங்கள் !!

2 comments:

  1. :) கும்பிடும் கூட்டத்தின் வாதம் சரியாகவே உள்ளது :)

    கருடன் = மகிழுந்து, சூப்பர் !

    ReplyDelete