Followers

Followers

Saturday 16 April 2016

ஒரு அதிகாலைப்பொழுது! கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.

"டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?"

கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ... அப்படின்னா நான் fat-ஆ இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க?" என்றாள்.

கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!"

மனைவி: "அப்போ என்னை sick-ன்னு சொல்றீங்களா?"

கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"

மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"

கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"

மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"

கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"

மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"

கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"

மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!"

கணவன்: "Ok! நானும் போகலை. போதுமா?"

மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை blame பண்றீங்க!"

கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"

மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"

வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை! டயர்டாகி படுத்துவிட்டான்.

திருமணமான ஆண்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்!

Good night

Thursday 14 April 2016

காலம் கனியும்வரை காத்திருக்க வேண்டும் -பெரியோர் வாக்கு .காத்திருந்தால் காலம் கடந்துவிடும் -இதுவும் பெரியோர் வாக்கு .
இந்த முரண்பாட்டுக்கு விடை -
வள்ளுவர் வாக்கு ~~
ஒடு மீன் ஓட உறு மீன் வரும்வரை வாடி இருக்க்குமாம் கொக்கு
அர்த்தம்: காலம் கனியும்வரை காத்திருந்து கனிந்தவுடன் அதனை  சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் .


Thursday 7 April 2016

☎📞☎📞☎📞☎📞☎📞
 மாதா அமிர்தானந்தமயி சொற்பொழிவாற்றும் போது கூறிய குட்டி கதை..!!

ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார். ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன். நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி.  மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான். நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன். வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். நாம் செய்யும் தவறை மற்றவர்கள் செய்தால் நமக்கு அதிர்ச்சியாகிறது. மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும்.

இந்த குட்டிக்கதையை மாதா அமிர்தானந்தமயி கூறினார்.
Good night