Followers

Followers

Friday, 24 June 2016

நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா. அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.
அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி. அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார். அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர். விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார்.அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்..சிந்திக்கவும் வைப்பார். அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார். ஆனந்தத்தில் மிதக்க வைப்பார். அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார்.
நாட்கள் விரைந்தது . நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. அம்மாவுக்கு இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை.அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை. அப்பா அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார். நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.
எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார்.அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார். சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும் தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல் தினந்தோறும் கூறி வந்தார். செக்ஸ் பற்றி கூச்சமில்லாமல் எல்லோர் முன்னிலையிலும் அவரால் பேச முடிகிறது. எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது .நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது.
எனது தாய் தந்தையர் பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார். நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை .நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை.
இப்போது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம். இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்.நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.அப்படி யார் அவர்?அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்? அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள். கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது. இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.................... ............................ .................... ............
...................... ................................ ................................ ............................... ...................
சொல்கிறேன் கேளுங்கள்.அவரை நாங்கள் "டிவி" என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது. அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.அவருடைய மனைவியின் பெயர் "கம்ப்யூட்டர்". இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் கைபேசி. இப்போது சொல்லுங்கள் இவர்களை எப்படி வெளியே அனுப்புவது?

Wednesday, 22 June 2016

ஒரு முதியவர் ஒரு.. ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..!
வெயிலில் வந்த களைப்பு.. அவர் முகத்தில் தெரிந்தது..! அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை.. அழைத்து கேட்டார்..! " தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை..! என்று..!
அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான்..!
பெரியவர் தனது சட்டை பைக்குள்.. கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார்.. "தம்பி அதற்கும் சற்று.. குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."?
சர்வர் கோபமாக "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க..
இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ.. இருக்கு அங்க போய் தொலைங்கயா..? என்றான்..!
பெரியவர் சொன்னார்.. "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்..
வெளியே வெயில் வேறு..அதிகமா இருக்கு.. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்..! என்றார்..!
சர்வர்.. சரி..சரி எவ்வோ பணம் குறைவா வச்சுயிருக்க..! என்று கேட்டான்..!
பெரியவர் என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது..! என்றார்..!
சர்வர் சரி..தருகிறேன் ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா..? என்றான்..!
பெரியவர் 'சரி' என சம்மதித்தார்..!
சாப்பாடு கொடுத்தான்..! பெரியவர் சாப்பிட்டு விட்டு அந்த சர்வரிடம்
50 ரூபாய் கொடுத்தார்..!
சர்வர் மேலும் கோபம் ஆனான்..
"யோவ் இந்தாதானேயா 50 ரூபாய் வச்சுயிருக்க..! 45 ரூபாய் தான் இருக்கு'னு சொன்ன..? ஓ.. வெற்றிலை.. பாக்கு வாங்குறதுக்கு 5 ரூபாய் தேவைப்படுதா..? இந்தா..மீதி 5 ரூபாய்..! என்று மீதியை கொடுத்தான்..!
பெரியவர் சொன்னார்.. வேண்டாம் தம்பி அது உனக்குத் தான்..! உனக்கு கொடுக்க என்னிடம் வேறு பணம் இல்லை..! என்று சொல்லிவிட்டு வெயிலில் நடந்து சென்றார்..!
சர்வருக்கு கண்களில் நீர்.. ததும்பியது..!
அன்பு நண்பர்களே ..
யாரேனும் எந்த சூழ்நிலைகளில் எப்படி இருப்பார்கள்..என்று நமக்கு தெரியாது..! யாரையும் ஏளனமாக பார்ப்பதும்..பேசுவதும் தவறு..!!


Tuesday, 14 June 2016

பாட்டி படுத்திருந்த திண்ணையின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் பேத்தி. திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டியது. பாட்டி, பேத்தியிடம், அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகுது. அண்டாவை முற் றத்தில் கொண்டு வந்து வச்சு மழை தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி..." என்றாள்.

போ... பாட்டி" என மறுத்தாள் பேத்தி. அடியே, அடுக்களையில் இருக்கிற பாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வைக்கிறது பெரிய வேலையா? போய் அண்டாவைக் கொண்டு வந்து அப்படியே வை..." என உத்தரவிட் டாள் பாட்டி. வெறுப்பாய் ஓடி, பாட்டி சொன்னதைச் செய்துவிட்டுத் திரும்பினாள் பேத்தி. அரை மணி நேரம் மழை கொட்டியது! இந்நேரம் அண்டா நிரம்பி இருக்கும் என ஆனந்தமடைந்த பாட்டி, திண்ணையை விட்டு முற்றத்துக்கு எழுந்து போனாள். "பகீர்" என்று ஆனது பாட்டிக்கு.

அண்டாவில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. ‘அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வை’ என்று பாட்டி சொன்னதை, வேத வாக்காக எடுத்துக் கொண்டு, கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த அண்டாவைக் கவிழ்த்த வண்ணமே மழையில் வைத்து விட்டாள, பேத்தி! மழை என்னவோ வஞ்சனை இன்றி தான் பெய்தது. பாத்திரம ்தான் கவிழ்ந்து கொண்டு தண்ணீரை ஏற்க மறுத்து விட்டது.

கடவுளின் அருளும் அப்படித்தான்! அது பொதுவா கவே அனைவருக்கும் கொட்டுகிறது. கவிழ்த்து வைத்தவர்களின் மனங்கள் அதில் ஒரு சொட்டுகூட ஏந்துவதில்லை. திறந்த மனத்துடன், பிரபஞ்சத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டால, பஞ்ச பூதங்களும் நமக்குச் சாதகமானவையே!

...ஓம். நமச்சிவாய

🚩🙏. நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் 🙏🚩

Thursday, 2 June 2016

On you

Rain do

Moon you

Null you

And chew

Are you

Yeah loo

Ate you

On pat you

Pat you

Confused??

It's an American,
Trying to count
Number from
One to ten in tamil...))))
ஒருவர் காபி shop விட்டு வெளியே வரும்
போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம் செல்வதை பார்த்தார் .......


ஒரு சவப்பெட்டி முதலில் எடுத்து செல்கிறார்கள் ...
அதை தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது .
அதற்க்கு பின்னால் ஒரு மனிதன்
கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்..🐕

அவருக்கு பின்னால் ஒரே வரிசையாக 200
ஆண்கள் நடந்து செல்கிறார்கள் .🚶🏼🚶🏼🚶🏼

இதை பார்த்த காபி ஷாப் மனிதருக்கு ஒரே ஆர்வம் ..
அடக்க முடியவில்லை .
அவர் கருப்பு நாயுடன்
நடந்து கொண்டிருந்தவரிடம்
சென்று,

என்னை மன்னிக்கவும் ...

உங்களை disturb
செய்வதற்கு ...

ஆனால் இந்த
மாதிரி ஒரு இறுதி ஊர்வலத்தை நான் என்
வாழ்கையில் பார்த்தது இல்லை ..

எல்லோரும்
ஒரே வரிசையில் உங்கள் பின்னால்
வருகிறார்கள்.,...

இது யாருடைய
இறுதி ஊர்வலம் ......

☝🏽முதல் சவப்பெட்டி என் மனைவி உடையது....

என்ன ஆயிற்று உங்கள் மனைவிக்கு ??

என்னுடைய நாய்
அவளை கடித்து கொன்று விட்டது ...

✌🏾இரண்டாவது சவப்பெட்டி ??

என்னுடைய மாமியாருடையது !!

அவர்கள் என் மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் கொன்று விட்டது ...


ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு முதல் மனிதர் அவரிடம் கேட்டார்

"இந்த நாயை எனக்கு சிறிது நாட்கள் தர
முடியுமா "


(அதற்க்கு அவர் சொன்ன பதில்)
.
.
.
.
.
.
.
பின்னால் வரும் வரிசையில் போய்
நில்லுங்கள் !
😄😄😄😄😄😄😄😄

Wednesday, 1 June 2016

காதல் குழம்பு *

தேவையான பொருட்கள்
1. அழகான பெண் ஒன்று.
2.இரண்டு சிம்கார்டு.
3.ரீ சார்ஜ் கூப்பன் தேவைக்கேற்ப...
4.பழைய புத்தகங்களின் இருந்து சில கவிதைகள்...
5.கடலை... தேவைக்கேற்ப
6ஜொள்ளு கால் லிட்டர்

செய்முறை :
முதலில் வீணாப்போன ஒரு பெண்ணிற்கு கால் லிட்டர் ஜொள்ளு ஊத்த வேண்டும்.
பின்பு உங்கள் தொலைப் பேசி நம்பரை கொடுக்கவும்.
பின்னர், பழைய புத்தகங்களில் கிடைத்த மொக்கை கவிதைகளை மெசேஜ் டைப் செய்து அனுப்பவும். பிறகு பெண்ணின் தேவைக்கேற்ப ரீச்சார்ஜ் செய்து பேச்சில் கடலையைப் போட்டால் காதல் குழம்பு ரெடி !!!!