Followers

Followers

Wednesday 24 May 2017

சில. வேண்டும்கள்

இன்றைய தேடல்

உள்ளம் கணக்கும் போது உறுதுணையாக உள்ளம் வேண்டும்.....

அழுது புலம்பும் போது ஆறுதல் கூறும் அன்பு வேண்டும்....

உயர பறக்கும் போது நூலின் நன்றி மறவாது இருக்க வேண்டும்.....

உதவி எண்ணும் போது அன்புடையேர் கண்ணேல்லம் காண வேண்டும்.....

கொடுப்பவர் பணம் காண மனம் காணும் உள்ளம்  வேண்டும்.....

இல்லாமை அழிந்திட வேண்டும்.....

வறுமை ஒழிந்திட வேண்டும்.....


Tuesday 23 May 2017

மெடிகல் லீவு.....

வாசுதேவன்-தேவகி இவர்களின் 8வது குழந்தையால் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்பதை அறிந்த கம்சன் அவர்களை சிறையிலடைத்து ஒவ்வொரு குழந்தை பிறந்ததும், அதனை தன் கையாலேயே கொன்று பழி தீர்த்துகொண்டானாம். என்று ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

அப்போ லாஸ்ட் பெஞ்சுல உட்கார்ந்திருந்த நம்ம மாணிக்கம்  எந்திருச்சு,
"டீச்சர்....கம்சனுக்குதான் அந்த 8வது குழந்தையால் உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு போச்சே, அப்புறம் ஏன் வாசுதேவன்-தேவகி ரெண்டு பேரையும் ஒரே சிறையில அடைச்சி வச்சான் ....?" அப்படின்னு கேட்டுச்சு...

*அன்னைக்கி மெடிக்கல் லீவ்ல போனவங்க தான் அந்த டீச்சர் இன்னும் வரல*

Monday 22 May 2017

அப்பா....

மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது
அவனுக்குப் பிடிக்கவில்லை.

நேற்று வரை வீட்டில் இருந்ததால்
அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி
இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. ”வேலை கிடைத்ததும் எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான்.

நேர்காணலுக்கு கிளம்பினான். “கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமான பதில் சொல்” என்று வழியனுப்பி வைத்தான் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.

கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்
கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.
அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

 நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன. தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக
குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்
கொண்டிருந்தது. குழாயை கையில்
எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.

வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக
மாடிப்படியில் ஏறினான். இரவில் போடப்பட்ட
விளக்கு காலை பத்து மணியாகியும் ஒளிந்து கொண்டிருந்தது. “விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.

மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே
திகைப்பு. “நமக்கு வேலை
கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். வருத்தத்துடனேயே அதை காலால் சரிசெய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சுற்றிக் கொண்டிருந்தன.
”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி
ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.

இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை. கலக்கத்துடனே
நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான். சர்டிபிகேட்களை வாங்கிப் பார்த்த அதிகாரி,
“நீங்கள் எப்போது வேலைக்கு
சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக்கூர்மை கேள்வியா, இல்லை
வேலை கிடைத்துவிட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன். ”என்ன  யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார், நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின்
மேலாண்மையை தெரிந்து கொள்வது
கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா
மூலம் கண்காணித்தோம்.

இங்கு வந்த எந்த இளைஞனுமே
தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.

அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.

அப்பாவின் மீதுள்ள எரிச்சல் தணிந்தது. வேலைக்குச் செல்லும் இடத்திற்கு
அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்
மகன்.

அப்பா நமக்காக எது செய்தாலும்
சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கும் !!!😁😁

Sunday 21 May 2017

சாதனையாளன்

முதல் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ அதிர்ஷ்டசாலி
இரண்டாம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ புத்திசாலி
மூன்றாம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ அனுபவசாலி
நான்காம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ தைரியசாலி
அதற்கு மேலும் வெற்றி பெற்றால்
நீ தான் சாதனையாளன்....

டி.வி....மொபைல்...

Wife - Tv மாதிரி
Girl frd - mobile மாதிரி
வீட்டுல இருக்கும் போது TV use பண்ணுங்க,
வெளியே போகும்போது mobile use பண்ணுங்க,

Tv உங்களுக்கு சில நேரம்தான் புடிக்கும், ஆனா mobile எப்பவுமே புடிக்கும்,

TV free யா use பண்ணிக்கலாம், ஆனா mobile charger போடலைன்னா,,,
top up
பண்ணலைன்னா,,,
அவ்வளவுதான் ,

TV பெரிசா , பல்லக்காட்டும். பழச இருக்கும் ,,,ஆனா mobile அழகா slim மா இருக்கும் ,

TV க்கு பராமரிப்பு செலவு கம்மியா இருக்கும் , ஆனா mobile க்கு அப்படி கிடையாது ,உங்க பர்ஸூக்கு சாவுமணி அடிக்காம விடாது ,

TV க்கு remote இருக்கும் ,
ஆனா mobile க்கு கிடையாது ,,,,

முக்கியமா mobile க்கு 2 வகையான uses இருக்கும் , ஒன்னு நீங்க பேசலாம் ,,,,மற்றொன்று கேட்கலாம் !

ஆனா TV யில் நீங்க பேச முடியாது அது சொல்றததான் கேட்கோனும்,,,!

கடைசியா ஒன்னே ஒன்று ,,,,

TV யில virus கிடையாது ,,,,
ஆனா mobile யில virus உண்டு,,,,

so be careful😜

Friday 19 May 2017

தவறே இல்லை.

சரி என்று வரும் வரை
தப்புகள் தவறே இல்லை

தெளிவு வரும் வரை
குழப்பங்கள் தவறே இல்லை

அழகு வரும் வரை
பருக்கள் தவறே இல்லை

உறவு வரும் வரை
தனிமைகள் தவறே இல்லை

சேர்க்கை வரும வரை
பிரிவுகள் தவறே இல்லை

பொறுப்பு வரும் வரை
குறும்புகள் தவறே இல்லை

காதல் வரும் வரை
ஏமாற்றம் தவறே இல்லை

குடும்பம் வரும் வரை
சுதந்திரம் தவறே இல்லை

வாய்ப்புகள் வரும் வரை
காத்திருப்பு தவறே இல்லை

வெற்றி வரும் வரை
தோல்விகள் தவறே இல்லை

Thursday 18 May 2017

நீ. நீயாகவே. இரு..

*நீ . . .நீயாக இரு !*

தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
*எனவே நீ . . .நீயாக இரு !*

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
*நீ . . .நீயாக இரு !*

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
*நீ . . .நீயாக இரு !*

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
*நீ . . .நீயாக இரு !*

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
*நீ . . .நீயாக இரு !*

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
*நீ . . .நீயாக இரு !*

நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
*எனவே நீ . . .நீயாக இரு !*

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
*நீ . . .நீயாகவே இரு !*