Followers

Followers

Tuesday, 31 January 2017

விலைவாசி.....

டீச்சர்: பசங்களா! நாளைக்கு க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம்... எல்லாரும் ஆளுக்கு 50 ரூபாய் கொண்டாங்க... சரியா?

டீச்சர் : (மனதுக்குள்ள) 20 ரூபா ஃபோட்டோவுக்கு 50 ரூபா வாங்கினா 60 பசங்களுக்கு 30 ரூ வீதம் 1800... இந்த மாதம் புதுப் புடவை தான்...

பையன்:(வீட்டுக்கு வந்தவுடன்) அம்மா நாளைக்கு ஸ்கூல்ல ஃபோட்டோக்கு 100 ரூ வேணும்...

அம்மா: ஃபோட்டோக்கு 100 ரூபாயா? கொள்ளையடிக்கிறாங்க.... சரி, சரி அழாதே... அப்பா வரட்டும்... கேக்கறேன்.

*அப்பா* வந்ததும்: என்னங்க... நம்ம பையன் ஸ்கூல்ல க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாய் கொண்டு வரச் சொல்லிருக்காங்களாம்... இல்லாட்டி உள்ளயே விட மாட்டாங்களாம்...

*அப்பா*: க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாயா? பகல் கொள்ளை... என்ன செய்யிறது?... சட்டைப் பையில இருக்கு எடுத்துக்க....
=========================

விலைவாசி எப்படி ஏறுதுன்னு புரியுதா? ..

Thursday, 26 January 2017

ஜோக்..joke of d day....................................

Teacher - Can you please tell the name of 2 great Kings who have brought happiness & peace into people's lives ?”

Student :

“Smo-king & Drin-king ” !!!

Teacher Resigned !😂😂😇😇


Teacher: Who was Akbar ?
Boy: Akbar was Gay.

Teacher:- What, Are you mad ? Why did you say that?

Boy:- We have heard Laila - Majnu, Romeo-Juliet
But Only
Akbar - Birbal !
Teacher died😂😂😂

This 1 is a killer 1 .....

Teacher : students.. On britannia tiger biscuit cover,there is a green dot. Wat does that mean?

Student : tiger is online.. .😂😂

don't laugh alone share with frds 😜😝
Wednesday, 25 January 2017

தவளை...

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

Tuesday, 24 January 2017

வக்கீல்...வக்கீல் ஒருவர் ரயில்ல சென்று கொண்டு இருந்தார்...
அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவருக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து உட்கார்ந்தால்.. நம்மாளுக்கு செம குஷி... அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால லைட்டா நம்மாளு அந்த சூப்பர் பொண்ண நோட்டம் உட்டார்... அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவர பாக்க... இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தார்... கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவர் இருந்த சீட் பக்கம் வந்து ஒக்கார... நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு இருந்தார்... அந்த பொண்ணு இவர்கிட்ட... ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதிரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு....இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிச்சாம் அந்த சூப்பர் பிகர்...

அவர் தான் வக்கீல் ஆச்சே... அதுக்கு நம்ம வக்கீல்.. பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து, எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது... நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில... நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு எழுதி காட்டினார்... அந்த பொண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாலோ.... அதே மாதிரி அப்படியே எழுதி காட்டினாளாம்... அத வாங்கி பாக்கெட்ல வச்ச பின்னாடி நம்மாளு மெதுவா சொன்னாரு.... இப்போ கத்துடி பாக்கலாம்...!!! கொய்யால, யாருகிட்ட! 😜😜😜

நீதி:" PROOF OF DOCUMENTATION IS VERY VERY IMPORTENT"
எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம்.

படித்ததில் பிடித்தது.
Monday, 23 January 2017

அடமானம்ராக்கேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி.
அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்.

ராக்கேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான். “எதுக்காகப் பணம் வேணும்…?”

அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார்.
“கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”

“அடமானமாய் என்ன தருவீங்க…?”

ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார்.
“அடமானம்னா என்ன..?”.

“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!”

ஆதிவாசி ஆள் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”.

ராக்கேஷ் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான்.

சில மாதங்கள் கழிந்தது. அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.
பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.

ராக்கேஷ் ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”

அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார்.
“லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…!”.

ராக்கேஷ் ஆர்வத்துடன் கேட்டான்.
“அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.

“என்ன செய்யறது… பொட்டில போட்டு வச்சிருக்கேன்…!”.

ராக்கேஷ் யோசித்தான். ‘இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக் கிடைச்சுட்டான்…!’ என்று நினைத்தபடியே,”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?” என்றான்.

ஆதிவாசி கேட்டார். “டெபாசிட்னா என்ன…?”.

ராக்கேஷ் விளக்கமாய்ப் பதில் சொன்னான்.
“நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்…!”.

கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.

“அடமானமாய் என்ன தருவீங்க…?”.Sunday, 22 January 2017

ராஜ தந்திரம்


படித்து சிரித்த கதை

எமதா்ம ராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.

மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளா்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம தனக்குள்ள பயத்தையும் விளக்கினார்.

மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.  மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.

எப்படித் தொியுமா? ஒருவா் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவா் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.

மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீா் விட்டு எமதா்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவா் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சா்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊா் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.

எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது?

பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான்.

அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.#பொண்டாட்டின்னா_எமனுக்கே_பயம்Saturday, 21 January 2017

நரியின் தந்திரம்..


🤗😱காட்டில் ஒரு சிங்கம்,
ஒரு ஆட்டை அழைத்தது.
''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.
ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,
'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.
உடனே சிங்கம்,''முட்ட
ாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.
அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து
.அதனுடைய கருத்தைக் கேட்டது.
ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,
''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்
றது.
சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது
.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.
நரி சொன்னது,
''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.
அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.
புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.😷Friday, 20 January 2017

கேள்வி..


கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!

**.) கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி

**.) கில்லெட் ரேசரில் சவரம் செய்து

**.) ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும் லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து

**.) ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு

**.) ஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும்

**.) பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு

**.) மேகி நூடுல்சை சாப்பிட்டு,
நெஸ்கபே காபியை குடித்துவிட்டு

**.) ரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு,

**.) சாம்சங் போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
ரேபான் கண்ணாடியையை அணிந்து,

**.) வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,

**.) ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி

**.) மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு

**.) மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,

**.) குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்..

"இந்தியன் ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சின்னு???"

**கேட்டான் பார் ஒரு கேள்வி**

நன்றி

யாரோ....Thursday, 19 January 2017

காலம் மாறிப்போச்சுகாலம் மாறாமல் மாற்றியது நம்மை..........
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும்
ஊரே அமர்ந்து பார்த்தோம்.
**
ஞாயிற்றுக்கிழமை மாநிலமொழி
திரைப்படம் தமிழில் போடமாட்டார்களா
என ஏங்கி கிடந்தோம்.
**
திங்கள்கிழமை பள்ளியில் அமர்ந்து
கொண்டு ஞாயிறன்று பார்த்த
படத்தைப்பற்றி விவாதம் செய்தோம்.
**
தாத்தவையும் பாட்டியையும் ஸ்கூல்
லீவு போட அடிக்கடி சாகடித்தோம்.
**
பெரிய மழை வந்தால் ஸ்கூல் லீவு என
சந்தோஷப்பட்டுக் கொண்டோம்.
**
முழு ஆண்டு விடுமுறையில்
மாமா பெரியப்பா பாட்டி வீட்டுக்கு
டூர் போனோம்.
**
ஒரே ஒரு ரூபாயைக் கையில்
வைத்துக்கொண்டு அன்று முழுவதும்
செலவு செய்தோம்.
**
100ரூபாய் நோட்டை ஆச்சரியத்துடன்
கையில் வாங்கி பெருமூச்சு
விட்டோம்.
அனைவர் வீட்டிலும் உண்டியல்
இருந்தது.
**
பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக
நின்றுகொண்டே படம் முழுவதையும்
பார்த்து ரசித்தோம்.
**
பீரோக்கள் முழுவதும் சக்திமான்
ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து அழகு
பார்த்தோம்.
**
ஹார்லிக்ஸ் பாட்டில்களில் மீன்களை
வளர்த்தோம்.
**
பொங்கலுக்கும் தீபாவளிக்கும்
கிரிட்டிங் கார்டு வாங்க குவிந்து
நின்று தேர்வு செய்தோம்.
**
10வது 12வது ரிசல்ட் பார்க்க மாலைமுரசு விற்பனைக்
கடையின்
வாசலில் தவம் கிடந்தோம்.
**
15வயதுவரை டவுசர்களையே
அணிந்திருந்தோம்.
**
பழைய மாடல் கேசட்களில் பிலிம்
சிக்கிக்கொண்டால் ரெனால்ஸ்
பேனாவால் உள்ளே விட்டு சுத்தி
சுத்தி அட்ஜஸ்ட் செய்தோம்.
**
கன்னிப்பெண்கள் அனைவருமே நதியா
மாடல் கொண்டை போட்டு அழகுபார்த்தார்க
ள்.
**
பணக்கார வீட்டு கன்னிப்பெண்கள் BSA SLR
சைக்கிளில் பேஷனாக வலம் வந்தார்கள்.
**
ஜாமென்ட்ரி பாக்ஸில் காசுகளையும்
மிட்டாய்களையும் போட்டு
வைத்தோம்.
**
நம் ஊரில் TVS-50 வைத்திருந்தவர்கள்
பணக்காரர்களாக இருந்தார்கள்.
**
கட்டான கரண்ட் மீண்டும் வந்ததும்
மகிழ்ச்சியில் கத்தி ஆராவரப்படுத்தினோம்.
**
வசதிகள் குறைவு.....
மனங்களின் நெருக்கம் அதிகம்.....
அன்றையப் பொழுதின் அருமை அன்று தெரியவில்லை...,.
போன்சாய் கன்றுகளாய் வளராமலேயே இருந்திருக்கலாமோ.......
காலத்தின் கரங்களில் தாயக்கட்டைகளாய் நாம்...

மலரும் நினைவுகள்!!!!.Wednesday, 18 January 2017

ஸெல்ஃபி பொங்கல்


😜😜😜😜😜😜😜

என்னடி..
பொங்கலை
ரொம்ப நேரமா
கிளர்ற?
பொங்கல் வேகலையோ?

இல்லீங்க,
'செல்பி'
எடுக்கறப்போ
மொபைல்
உள்ள விழுந்திருச்சு...
அதைத்தான்
தேடிட்ருக்கேன்.😀😀😀😀😀😀😀Tuesday, 17 January 2017

வெற்றி..

*4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !
*8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
*12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
*18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
*22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
*25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
*30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
*35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
*45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !
*50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
*55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
*60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
*65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
*70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
*75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
*80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

Monday, 16 January 2017

முனுசாமி😇😇😇குடிகார முனுசாமியை தொட்டியில் மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்துக் கொண்டு பாஸ்ட்டர் கூறினார்.

" உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டது. இன்றுமுதல் நீ பரிசுத்தமானவனாகிறாய், ''மோசஸ்' என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்யம் செய்துகொடு மோசஸ்".

"சத்யம் பாஸ்ட்டர் இனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன், சர்பத் குடிக்கலாமா பாஸ்டர்?"
"தாராளமாக எத்தனை தடவ வேணும்னாலும் குடிக்கலாம்"

ஓகே பாஸ்ட்டர்.
மோசஸான குடிகார முனுசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு புல் பாட்டில் விஸ்கியை எடுத்து தொட்டியில் இருந்த தண்ணீருக்குள் மூன்றுமுறை முக்கி எடுத்துக்கொண்டு கூறினான்.

" உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது. நீ புதிதாக சுத்தமானதாக பிறந்திருக்கிறாய். இன்றுமுதல் நீ 'சர்பத்' என்றழைக்கப்படுவாய். ஆமேன்... "😂😂😂Thursday, 12 January 2017

கடவுள்...கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது..

ஒரு நன்பர் நேரில் பார்த்த உண்மை சம்பவம்..!

ஒரு ஊரில் உள்ள சிறிய உணவகத்தில்..பள்ளி சீருடை அனிந்த
ஆறு வயது மதிக்கத்தக்க சின்ன பெண்(கையில் தூக்கு வாளியுடன்):

பெண் குழந்தை :-
பாட்டி ...! அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க...
காசு நாளைக்கு தராங்களாம்...!

ஹோட்டல் நடத்தும் பாட்டி : -
ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லும்மா..இதில உனக்கு... தம்பிக்கு..உன் அம்மாவுக்கு..
எல்லோருக்கும் சேர்த்து '15 இட்லி வச்சிருக்கேன்
தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....

(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).

குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் பாட்டி .... (குழந்தை கிளம்பிவிட்டாள்)

அந்த கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம் ஆதலால் அந்த
நனபர் மனதில் நினைத்ததை அந்த பாட்டியிடம் கேட்டார்...!

நன்பர் :
நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க பாட்டி ....!

பாட்டி :
அட சாப்பாடுதானே பா ....நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல பா ...அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்....எல்லாருக்கும் பணம் சுலப-மாவா சம்பாதிக்க முடியுது....

நான்: ஏன் பாட்டி அவங்க வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல..!

பாட்டி :
குழந்தை கேட்டிருக்கும்.. அதான் சார் அனுப்பி இருக்காங்க...
அவங்க கணவர் 'பக்கவாதம் வந்து வேலைக்கு போகமல் வீட்லதான்
இருக்காரு..! இவங்க அம்மாதான் கூலி வேலைக்கு போவும்.சில நேரம்
சாலை ஓரத்தில காய்-கரி வியாபாரம் செய்து கணவர் மற்றும் இரணடு
பிள்ளைகளை காப்பாற்றுது..!.
நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பலப் பா ... நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...வந்துடும் பா ...ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்டுதுல்ல அதுதான் பா முக்கியம்....!

'கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது..
இடலி பாட்டிதான் இந்த ஏழைகளின் கடவுள்...

இதை படிப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இது போன்றவர்களை வாழ்கையில் கடக்க நேரிட்டால் உங்களால் ஆன உதவியை செய்து விட்டு வாருங்கள். சிறிய உதவி என்று எதுவுமே இல்லை. சரியான நேரத்தில் செய்யப்படும் எந்த உதவியும் ஞாலத்தினும் மானப் பெரிது !!பாட்டி உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை..
மாமனிதநேயமுள்ள உங்களை..உங்கள் பாதம் தொட்டு
வணங்குகிறேன்....!

நட்புடன் உங்கள் நண்பன் .Wednesday, 11 January 2017

பெயர் என்ன...

#ஹாஹாஹாஹா எனக்கே ப்ரஷ்ஸர் ஏறிடுச்சு.அப்போ அவருக்கு ஏறாதா என்ன.!!!
_________________________________________

ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சோதனை செய்ய கல்வி ஆய்வாளர்(CEO) ஒருநாள் திடீரென வந்தார்.அது ஒரு வீம்பு புடிச்ச பள்ளிக்கூடம் என்பதால் அந்த ஊர பத்தி ஏற்கனவே நிறைய பேர்கிட்ட விசாரிச்சிட்டு வந்துள்ளார்.பிறகு ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தார் ஆய்வாளர்.அவர பாத்ததும் பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க.

சரி இந்த பசங்ககிட்ட பாடம் சம்பந்தமா கேள்விலாம் கேக்க வேணாம்.முதல்ல இவங்கள பத்தி கேப்போம்னு நினச்சு ஒரு பையன எழுப்பினார்.

CEO : உன் பேர் என்ன?

BOY-1 : பழனி

CEO : உன் அப்பா பேரு?

BOY-1 : பழனியப்பா

(அடுத்தப் பையன எழுப்பி)

CEO : தம்பி உன் பேர் சொல்லு?

BOY-2 : மாரி

CEO : உன் அப்பா பேரு ?

BOY-2 : மாரியப்பா

(சிறிய சந்தேகத்துடன் அடுத்தப் பையன எழுப்பி)

CEO : உன் பேர் சொல்லு தம்பி?

BOY-3 : பிச்சை

CEO : உன் அப்பா பேரு?

BOY-3 : பிச்சையப்பா

இப்போ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு,
சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்கனு புரிஞ்சுகிட்டாரு.கொஞ்சம் உஷாரா அடுத்த பையன்கிட்ட கேள்வியே மாத்தி கேட்டாரு

CEO : தம்பி,நீ முதல்ல உன் அப்பா பேரைச் சொல்லு?

BOY-4 : ஜான்

CEO : இப்பொ உன் பேரைச் சொல்லு ?

BOY-4 : ஜான்சன்

(கொஞ்சமா டென்சன் ஆயிட்டு, அடுத்த பையன எழுப்பி,)

CEO : உன் அப்பா பேர சொல்லு,

BOY-5 : தாசன்

CEO : சரி உன் பேரு என்ன?

BOY-5 : காளிதாசன்

(கொலவெறி ஆயிட்டாரு நம்ம ஆய்வாளர்.பிறகு
கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,வித்யாசமா கேள்வி கேட்டாரு)

CEO : உன் தாத்தா பேர சொல்லுடா?

BOY-6 : மணி

CEO : சரி அப்பா பேரு?

BOY-6 : ரமணி

CEO : உன் பேரு?

BOY-6 : வீரமணி

(ஆய்வாளருக்கு லேசாக நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது.நெஞ்சில் கை வைத்து பிடித்துக்கொண்டே கடைசி பையனிடம் கேட்டார்)

CEO : உன் தாத்தா பேர் என்னடா?

BOY-7 : தீன்

CEO : உன் அப்பா பேரு?

BOY-7 : மொய்தீன்

CEO : உன் பேருருரு? (லேசாக மயங்குகிறார்)

BOY-7 : ஹாஜா மொய்தீன்

அப்புறம் என்ன.! அந்த ஆய்வாளர் நெஞ்சுவலி வந்து கீழ விழுந்துட்டார்.ஆம்புலன்ஸ்ல தூக்கிட்டு போயிட்டாங்க.அதோட அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வர்றதே இல்ல.

😜😝🍼

Tuesday, 10 January 2017

குதிரைக்காரன்🎅 பெரிய குரு இருந்தார்.

🚫 முற்றும் துறந்தவர்.

✅ எல்லாம் கற்றவர்.

📢 அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க.

🔣 பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.

🏇 அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான்.

☔ அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை.

🔇 கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.

🎅 குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.

🎤 பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம்.

👳 இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.

☝ ‘என்னப்பா பண்ண லாம்?’ னு கேட்டார்.

🙏 ‘அய்யா! நான் குதிரைக் காரன் 🏇

❗எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க 😒

👌 ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க.

🐎 நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.

🌾 புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க ❗

👮 நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’ னான்.

👋 பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு.

🏇 அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு,
அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.
🔣 தத்துவம்,
🔠 மந்திரம்,
🚫 பாவம்,
✅ புண்ணியம்,
🌁 சொர்க்கம்,
🔥 நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு.

🎤 பிரசங்கம் முடிஞ்சுது.

✴ ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.

🙏 ‘அய்யா… நான் குதிரைக்காரன்.
😳 எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க.
👌 ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க…

🌾 நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு 🐎 குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன்.
🔢 முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான் 😨

😱 அவ்ளோதான்❗
😰 குரு தெறிச்சிட்டார்!

© நீதி:
✊ மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும் ✅

👼 புரியாத,
😇 தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் .........😂😂😂
Monday, 9 January 2017

வெண்ணை..ஹோட்டல் முதலாளி: புதுசா ‍‍வேலைக்கு சேர்ந்த அரவை மாஸ்டரிடம், இங்க பாருப்பா மாவு நல்லா நைசா அரைக்கனும் தெரியுதா?

சரிங்க முதலாளி அப்படியே அரைச்சுடறேன்னு சொல்லிட்டு அரைச்ச மாவை முதலாளி கிட்ட காமிச்சா, பரவாயில்லை ஆனா இன்னும் நைசா அரைக்கனும்..

அடுத்த நாள் கூடுதலா நேரம் எடுத்து கிரைண்டர்ல அரைச்சு கொண்டுவந்து முதலாளிகிட்ட காட்றாரு. நேத்தையவிட இன்னைக்கு பரவாயில்ல. நாளைக்கு அரைக்கிற மாவு வெண்ணைய் மாதிரி நைசா இருக்கனும்கிறார்..

இது என்னடா இவ்வளவு நைசா அரைச்சும் முதலாளிக்கு திருப்தியா இல்லையேன்னுட்டு, சரி இன்னைக்கு ஒரு ‍வேலை பண்ணுவோம் முதலாளி இதுக்கு என்ன சொல்றாருன்னு பாப்போம்னு மாவு அரைச்சு முடிச்சதுக்கப்புறம் முதலாளிகிட்டே கொண்டுபோய் காட்றாரு.. இன்னப்பா நேத்து அவ்வளவு சொல்லியும் மாவு வெண்ணைய் மாதிரி நைசா அரைக்கலை யேன்னுட்டார் முதலாளி..

இன்னையோட நான் என்வேலையை ராஜினாமா பண்றேன்முதலாளி, ஏன்யா வந்த 3 நாள் தானே ஆகுது என்ன பிரச்சனை உனக்கு, எனக்கு இங்க சரிப்பட்டு வராது, ஏன் என்னய்யா ஆச்சு?

முதலாளி நானும் மாவை நைசா அரைச்சு கொண்டுவந்து 2 நாளா காமிச்சேன். உங்களுக்கு திருப்திப்படலே. இன்னைக்கு வெண்ணையே கொண்டுவந்து அரைச்ச மாவுன்னு காமிச்சேன் அப்பவும் நீங்க வெண்ணைய் மாதிரி இருக்கனும்னு சொல்றீங்க, இதுக்கு மேல உங்கள திருப்திப்படுத்தமுடியாது கிளம்பறேன்னு சொல்லிகிளம்பிட்டார்..

மனிதனை உற்சாகப்படுத்துவது சிரிப்பு.. கவலைகளை மறக்கச் செய்வது சிரிப்பு..உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது சிரிப்பு.. சிரிப்போம். மற்றவர்களை சிரிக்கவைப்போம்..😂😂😂😀😀😀😀😀
Sunday, 8 January 2017

பூனக்குட்டி..


படித்ததில் பிடித்தது
நண்பனுடன்
அவனது வீட்டிற்குச்
சென்றிருந்தேன்..
வாசலில்
அவனது பாட்டி
கயிற்றுக் கட்டிலில்
கிடந்தார்..

நண்பன் உள்ளே
போய்விட்டான்..
நான் : என்ன பாட்டி
நல்லா
இருக்கிங்களா..?

பாட்டி : நல்லாருக்கேன்
ராசா.. நீ ராசா..?

நான் : நல்லாருக்கேன்
பாட்டி..

இடையே எனது Android
தொலைபேசி அழைத்தது..
பேசி முடித்தேன்..

பாட்டி : என்னாய்யா அது
டிவி பொட்டி கணக்கா..?

நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்க
ஃபோனு..
சட்டென்று ஞாபகம்
வந்தவனாய்
அதிலிருந்த Talking Tom-ஐ
எடுத்துக் காட்டினேன்..

பாட்டி: இதுகிட்ட
பேசினா
அத அப்புடியே திரும்ப
பேசும்..

பாட்டி : என்ன
ராசா சொல்றே..?

Talking Tom :என்ன
ராசா சொல்றே..?

நானும், பாட்டியும், Talking
Tomமும் சிரித்தோம்..

பிறகு வீட்டினுள்
சென்றேன்..

எல்லோருடன்
பேசிவிட்டு வெளியில்
வந்தேன்...

வாசலில் பாட்டி..

நான் : போயிட்டு வாரேன்
பாட்டி..

பாட்டி : ராசா...

நான் : என்னா பாட்டி..?

பாட்டி : ஏய்யா..
அந்தபூனகுட்டிய
இங்க உட்டுட்டு போயா..

நான் : என்ன
பாட்டி சொல்றிங்க..?

பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல
இங்க
எங்கிட்ட யாருமே பேச
மாட்றாங்கயா..
நா செத்துபோறப்ப
அந்த
பூனகுட்டிகிட்டயாச்சும்
பேசிட்டே சாவுறேன்யா..

நண்பனைப் பார்த்தேன்..

யாருடனோ (!)
ரகசியமாய்ப்
பேசிக்கொண்டு
இருந்தான்..

நா சாப்ட்டேன் செல்லம்..
நீ செல்லம்..?
Ok செல்லம்....
நா வீட்ல இருக்கேன்
செல்லம்....
அப்புறமா பேசுறேன்
செல்லம்..
???????????Saturday, 7 January 2017

ஒன் டச் எஸ். எம். எஸ்


atb---------  all  the  best

j4f---------  just for fun

sus-------- see  you  soon

6 u 5 n------ are  you  fine

i  m  u------- i  miss  you

n i-----------nice  one

w@---------- what?

w 8---------  wait

kit----------  keep in tuch

l m k-----------   let  me know

b4 n------------  bye  for  now

w 8  4  m--------wait  for  me

l @ m------------- look  at  me

 i a s---------------   i am sorry

@  d aa-------------- ' appaa'  daa

j a m------------------ just  a minute

d d----------------don't  dis turb

 n b------------- no  balance

 h a y------------how  are  you

o t w-------------  on the  way

m c------------   missed  call

c u 2 m------------  see  you  to mo rro w

2   w @ i s---------- do what i say
 t s  4 u------------   its  for  you

ts  2 l t-------------- its  too  late

cn  v mt  2 mr-----------can we meet  tomorrow

Thursday, 5 January 2017

குலசாமிடா...


அப்பா :
"என்னடா... உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?"

பையன் :
"அம்மா 'lipstick' எடுத்து தர சொன்னாங்க... நான் தெரியாம 'fevistick' எடுத்துக் கொடுத்துட்டேன்பா."

அப்பா :
"நீ என் மகன் இல்லடா...
என் குல சாமிடா..!"

😝😜😝😜😜😝😜😝😜
😜😀😀Wednesday, 4 January 2017

நம்பிக்கை..{✅ஒரு தடவை படித்து பாருங்கள். பல தடவை யோசிப்பீர்கள்😇😇😇
இந்த கதையை.}

நான்கு 🎍🎍🎍🎍மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
இருந்தன. மெலிதாய் 💨காற்று வீசிக்கொண்டு
இருந்தது..!!

💨காற்றை கண்டதும்...

'அமைதி‘ என்ற முதல் 🎍மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் ☁அணைந்து
விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
💨காற்று பட்டதும் ☁அணைந்துவிட்டது.

‘அன்பு ‘ என்ற அடுத்த 🎍மெழுகுவர்த்தியும்
💨காற்றை எதிர்க்க முடியாது’ என்று ☁அணைந்துவிட்டது.

'அறிவு‘ என்ற மூன்றாவது 🎍மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல் 💨அணைந்தது.

நான்காவது 🎍மெழுகுவர்த்தி மட்டும் 💨காற்று
வீசிய சிலநொடிகள் போராடி 👍👍ஜெயித்துவிட்டது.

அப்போது அந்த அறையில் ஒரு 👦🏻சிறுவன் நுழைந்தான்.
‘அடடா மூன்று 🎍🎍🎍மெழுகுவர்த்திகளும் 💨☁☁அணைந்துவிட்டதே'
என்று கவலையுடன் சொன்னான்.

அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது 🎍மெழுகுவர்த்தி
சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்.
என்னை வைத்து மற்ற 🎍🎍🎍மூன்றையும் பற்ற வைத்துகொள்’
என்றது.

👦🏻சிறுவன் உடனே..

நான்காவது 🎍மெழுகுவர்த்தியை பார்த்து
” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..

'நம்பிக்கை' என்றது அந்த 🎍மெழுகுவர்த்தி.

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
இழக்கக் கூடாது...!!🙏


Tuesday, 3 January 2017

அழகானது..☔ எரிவதில் *தீபம்* அழகானது.......!!!
☔ சுடுவதில் *சூரியன்*அழகானது.......!!!
☔ சுற்றுவதில் *புவி* அழகானது.......!!!
☔ வளர்வதில் *பிறை* அழகானது.......!!!
☔ மின்னுவதில் *விண்மீன்* அழகானது........!!!
☔ தவழ்வதில் *குழந்தை* அழகானது........!!!
☔ குதிப்பதில் *கடல்* நீர் அழகானது......!!!
☔ விழுவதில் *அருவி* அழகானது..........!!!
☔ உறைவதில் *பனி* அழகானது........!!!
☔ விளைவதில் *பயிர்கள்* அழகானது.......!!!
☔ தலை சாய்ப்பதில் *நெற்கதிர்*அழகானது......!!!
☔ குளிர்ச்சியில் *தென்றல்*அழகானது........!!!
☔ உழைப்பதில் *வியர்வை* அழகானது.......!!!
☔ பாடுவதில் *குயில்* அழகானது.........!!!
☔ பறப்பதில் *புறா* அழகானது........!!!
☔ கலையினில் *அறுபத்துநான்கும்* அழகானது......!!!
☔ உறவினில் *நட்பு* அழகானது........!!!
☔ மொழிகளில் *மழலை* மொழி அழகானது.......!!!
☔ மலர்களில் *ரோஜா* அழகானது......
☔ மலர் வாசனையில் *மல்லிகை* அழகானது....
☔ கலர்களில் *கருப்பே*
அழகானது.....
☔ கலாச்சாரத்தில் *நம் நாடே* அழகானது
☔ இத்தனைக்கும் இதற்கு மேலேயும்.......
☔ எப்போதும் *தாய்மை* அழகானது........!!!
☔ இதை உணர்ந்த அத்தனை *உள்ளங்களும்* அழகானது.......!!!
☔ இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்.....???
☔ *குறை ஒன்றும்*இல்லையே........!!
☔ அழகான *வாழ்க்கையை* ஆராதிப்போம்.......!!!


Monday, 2 January 2017

நாகரீக கோமாளி..நாகரீக கோமாளிகள் :
--------------- --------------
ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.
காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது .
ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை கூட
பெருமை பொங்க சொல்வர்..
நாங்கள் ஓ... என்று ஆரம்பித்தால் மட்டும்
ஒழுக்கம் இல்லாதவர் என்பர்.
அந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?
பத்து வரியை படிக்க சொன்னால்
பல்லை இளித்து காட்டுவார்
ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி
வைத்து அறிவாளி வேடம் போடுவார்.
முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
அலட்சியம் செய்து போவார்.
ஒரு Kurkure'வை வாங்கி கொண்டு
கோமான் போல திரிவார்..
நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
அலப்பறை அதிகமாய் மின்னும்
நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
மனதில் சேக்சுபியர் என்று எண்ணம்.
பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
புரியாதவர் போல படிப்பார்..
Harry Potterஐ வாங்கி வைத்து
மேதாவி போல நடிப்பார்..
நண்பா தோழா என்பதை
பழமை சாயம் பூசுவார்
Bro Dude என்பதை எல்லாம்
புரியாமலே பேசுவார்
அன்பெனும் அம்மா
Mummy ஆனது
அழகிய தமிழ்மொழி
Dummyஆனது
ஆங்கிலம் என்பது
பெருமையானது.
நீங்கள் அலட்டிக்கொள்வது
மடமையானது.
அரசியலில் தான் விடுதலை பெற்றோம்
நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.
பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள்.


Sunday, 1 January 2017

சிரிங்க பாஸ்...


கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?''

டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்...? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே!''

2. "மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?"
"அது.... குருவி!"

3.ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?
நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்.

4.பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா:  பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."

5(கல்யாண மண்டபம்)
"வாங்க.. வாங்க..! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா? பொண்ணு வீட்டுக்காரரா..?"
"ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!"

6.ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.


7. காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.
காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?
காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? சாரி!

8 . ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம், அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம் , அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
?
?
MY CROW SOFT

9 . ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்?
ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு.

10 . ford ன்னா என்ன?
வண்டி
oxford ன்னா?
காளைமாட்டு வண்டி.
😀😀😀😀😀புத்தி வந்ததா....

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

 ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?

    -

 ☺😊😀😂😃😄😅😆