Followers

Followers

Friday, 14 April 2017

பீப்பீ.......

ஒரு  பேரூந்து நிலையத்தில் ஒரு சிறுவன் தன் அப்பாவிடம் பேசியதைக்  கேட்டவுடன் ஒரே சிரிப்பு..

அப்பா...எனக்கு  பீப்பியும்..விசிலும்  வாங்கி தாங்க....

வேணாம்  நீ  எல்லாரையும் தொந்திரவு  பண்ணுவே..

இல்லப்பா...நான்  எல்லாரும்  தூங்கினதுக்கு அப்புறமா  ஊதுறேன்..))))

Monday, 10 April 2017

அந்த வயதான முதியவள் அவளுடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து,"எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றாள்.

உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதியவளிடம்,"ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்"  என்றாள்.

உடனே அந்த முதியவள்,"ஏன்?" என்று கேட்டாள். உடனே அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன் அந்த முதியவளிடம்,"இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்று கூறினாள் சற்றே கடுமையுடன்.

அந்த முதியவள் இப்பொழுது அமைதியாக நின்றாள். அவள் தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து,"தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்துவிடுங்கள்" என்றாள்.

அந்த கேஷியர் பெண் அந்த முதியவள் அக்கவுண்டில் உள்ள பண நிலுவையை பார்த்த பொழுது அதிர்ச்சியானாள். அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவளிடம், "என்னை மன்னித்து கொள்ளுங்கள் பாட்டி, உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது, எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை ஒரு நேரம் ஒதுக்கி வர இயலுமா? என்று மிக பணிவோடு பவ்யமாக கேட்டாள்.

உடனே அந்த முதியவள்,"இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்?" என்று கேட்டாள்.

உடனே அந்த பெண்,"மூன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்" என்றாள்.

உடனே அந்த முதியவள் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று கூறினாள். அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள்.அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னாள். அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள்.

இந்த கதையின் நீதி என்னவென்றால்  சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும், நாம் மனிதர்கள் சில சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகலாம். ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை எடை போட கூடாது. மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.

Thursday, 6 April 2017

பால்

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 💐☝😄

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝😄

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐

 சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்.🙏🌷

 அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!🌷

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!😰🤔🌷💐

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 🌷

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰

என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐

இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰
கவலைப்படவில்லை.

திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். 👍

எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.💐🌷

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி,

மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 😰

நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, 😰

அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.

‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.👍🤔🌷

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?

அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.

எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.

 உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,

அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள 🌷நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், 💐

ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 💐

ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 🌷

அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். 💐🌷

உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 💐

அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 100 ரூபா விலை சொல்றான்” என்றாள்.🌷🤔☝

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு 💐🤔ஆச்சர்யப்பட்டேன்.

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், 🌷💐

ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 100 ரூபாயாகக் கூடிவிட்டதே! 🤔😄👍🌷

இதை நினைக்கிறபோது,

நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.💐👏😄👍🙏

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?🌷💐😄

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் 👌👍நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை 🤔👌🌷
உயர்த்துகிற அம்சங்கள்


💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹

Wednesday, 22 March 2017

பாசம்..


*அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது*

வசதியாகத்தான்
இருக்கிறது மகனே…
நீ
கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்.
பொறுப்பாய்
என்னை
ஒப்படைத்து விட்டு
வெளியேறிய
போது,
முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில்
விட்டு விட்டு
என் முதுகுக்குப்
பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில்
எழுகிறது!

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை
அறிகையில்,
அன்று உனக்காக
நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல்
போனாலும்,
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்கு
மனம்
மகிழ்ச்சியடைகிறது.
நீ விடுதியில்
தங்கிப் படித்த
காலத்தில்
உன்னைப் பார்க்க
வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்,
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க
மறுத்ததன்
எதிர்வினையே இது
இப்போது அறிகிறேன்.

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக
சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப்
பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்.
ஆயினும்
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு;

நான்
கற்றுக்கொடுத்தேன்
உனக்கு;
வாழ்க்கை இதுதான் என.
நீ கற்றுக்
கொடுக்கிறாய்
எனக்கு,
உறவுகள்
இதுதானென்று!

இந்தக் கவிதையைப்
படித்ததும் கண்கள்
குளமாகின்றது.

தாய் தந்தை மீது பாசம்
உள்ள
ஒவ்வொருவரும்
உணறவேண்டிய விஷயம் இது.





Monday, 20 March 2017

ராம நாம மகிமை..

வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்

என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,

மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு

33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32

எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின .ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு

ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி

ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.




அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று.

Sunday, 19 March 2017

முட்டாள்

காவலர்:
யோவ் உன் பேர் என்னயா?
குடிமகன்:
என் பேரு 'ராஜேஷ்'ங்க.
ஆதார் அட்டைல 'ருஜேஷ்'ங்க.
ரேசன் கார்டுல 'ரஜேஷ்'
ஸ்கூல் டீசியில 'இராஜேஷ்'
டிரைவிங் லைசென்ஸ்ல 'ரிஜேஷ்'ங்க.
காவலர்:
யோவ், என்னயா பேர கேட்டா,
ஒலரிகிட்டு இருக்கே.
குடிமகன்:
நான் ஒலரலைங்க சார்!
நம்ம நாட்ல அரசு ஆவணங்களில்
நம்ம பெயரை இப்படித்தான் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு
எழுதி வைக்கிறாங்க.
காவலர்:
என்னயா இது?
ஆதார் அட்டைல
உன் போட்டோவே இல்ல.
குடிமகன்:
நல்லா உத்துப் பாருங்க சார்,
அதுல என் கண்ணு மட்டும் தெரியும்.
நம்ம டெக்னாலஜி அப்டி.
காவலர்:
உன் லைசென்ஸ்ல
கையெழுத்த காணோம்?
குடிமகன்:
நல்லா பாருங்க சார்,
கை ரேகை மாதிரி
ரெண்டு மூனு கோடு போகும்.
காவலர்:
ஆமா நீ எதுக்கு ஓவர் ஸ்பீடுல வந்தே?
குடிமகன்:
சார், நான் வச்சிருக்கிறது TVS -50.
இது 40 க்கு மேல போகாதுங்க.
காவலர்:
ரேஸன் கார்டுல உனக்கு வயசு
12 னு போட்டிருக்கு?
எப்டி நீ வண்டி ஓட்டலாம்?
குடிமகன்:
அய்யோ ஆபிசர்,
இது 10 வருஷத்துக்கு முன்னாடி
தமிழக அரசு கொடுத்த ரேசன் கார்டு.
இப்ப வரைக்கும் புது ரேசன் கார்டு தரவே இல்ல.
இப்ப எனக்கு 22 வயசு சார்.
காவலர்:
ரோடு டேக்ஸ்லாம்
ஒழுங்கா கட்டிருக்கியா?
குடிமகன்:
நம்ம ஊர்ல எங்க சார் இருக்கு ரோடு?
நீங்க ரோட காட்டுங்க
நாங்க டேக்ஸ கட்டுறோம்.
காவலர்:
இது சரிவராது.
நீ கோர்ட்ல வந்து பேசிக்கோ.
குடிமகன்:
ஐயோ வேணாம் சார்.
வாய்தா வாய்தானு
நாலு வருஷத்துக்கு இழுத்தடிச்சு அப்புறம் கேஸயே
தள்ளுபடி பண்ணிருவாங்க.
நீதி மன்றத்துல எப்ப சார்
எங்கள மாதிரி ஆளுங்களுக்கு
நீதி கிடச்சிருக்கு?
காவலர்:
இவ்ளோ வெவரமா பேசுறியே,
நீ என்ன படிச்சிருக்க?
குடிமகன்:
பாத்தீங்களா சார்,
நான் படிச்சவன்கிறதாலதான்
தெளிவா கேக்குறேன்னு
நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்க.
படிச்சா வெவரம் வந்திரும்னு தெரிஞ்சுதான் அரசு
சில அரசு பள்ளிகளை மூடிட்டு,
மீதி இருக்கிற பள்ளிகளைக்
கவனிக்காம வச்சிருக்காங்க.
நாம முட்டாளா
இருக்குற வரைக்கும்தான்
அவங்களால
ஆட்சி செய்யமுடியும்.
காவலர்:
சரியா சொன்னே தம்பி.
உன்ன மாதிரியே எல்லாரும்
தெளிவா இருந்தா
நாங்க ஏன் உங்கள
தொல்ல பண்ண போறோம்.
சரி தம்பி நீ கெளம்பு.
பாத்துப் போப்பா.

Thursday, 16 March 2017

லீவு நல்லது

#லீவு_நல்லது

"ஒரு குழந்தை டெய்லி School க்கு போயி 100% Attendance வாங்கி, வருச கடைசியில ஒரு கோப்பை வாங்குறது பெருமையில்லை!!!

கல்யாணம், காதுகுத்து, இழவு, திருவிழா ன்னு எல்லா இடத்துலேயும் கூட்டிட்டு போங்க!!
அப்ப தான் நாகரிகம், பண்பாடு தெரியும்!!
உறவுகளின் வலிமை, ஒற்றுமை, விட்டுக்குடுத்தல், அழுகை, சிரிப்பு ன்னு நிறைய தெரிய வரும்!!!

இந்த சமூகம் ஒரு நாளில் கற்றுக் கொடுப்பதை, அந்த விடுமுறை எடுக்காத நாளில் அந்த வகுப்பறை கற்றுக் கொடுத்து விடாது!!!"