Followers

Followers

Tuesday 22 November 2016

முழுபூசனி......சோறு...



‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சுசாப்பிட்டாங்களாம். ஊரில் அரசால் புரசலாக பணக்காரர் பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ளஆரம்பித்தார்களாம். இதை மறைக்க ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம். “இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும் இவரா கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது” என்று பேசிக்கொண்டார்களாம். இதுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை....😂😂


முழுபூசனி......சோறு...



‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சுசாப்பிட்டாங்களாம். ஊரில் அரசால் புரசலாக பணக்காரர் பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ளஆரம்பித்தார்களாம். இதை மறைக்க ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம். “இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும் இவரா கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது” என்று பேசிக்கொண்டார்களாம். இதுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை....😂😂


Thursday 17 November 2016

👲🏻அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேனும்ன எதாவது கேட்டு பாரு


👱🏻இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?


👲🏻அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா !😆😆😆😆😆😆😂😂😂😂😂😂😂

Wednesday 16 November 2016

M.P.SIR.

FUNNY INTERVIEW 👌 👍
Officer : What Is Your Name ?
Candidate : M P. Sir.
Officer : Tell Me Properly.
Candidate : Muthu Pandi Sir.
Officer : Your Father's Name ?
Candidate : M P. Sir.
Officer : What Does That Mean ?
Candidate : Muruga Pandi Sir.
Officer : Your Native Place ?
Candidate : M P. Sir.
Officer : Is It Madhya Pradesh ?
Candidate : No, Madurai Pakkam Sir.
Officer : What Is Your Qualification ?
Candidate : M P. Sir.
Officer : (Angrily)😠 What Is It ?
Candidate : Metric Pass Sir.
Officer : Why Do You Need A Job ?
Candidate : M P. Sir.
Officer : And What Does That Mean ?
Candidate : Money Problem Sir.
Officer : Describe Your Personality ?
Candidate : M P. Sir.
Officer : Explain Yourself Clearly..
Candidate : Mindblowing Personality Sir.
Officer : This Discussion Is Now over, 😥
You May Go
Now.... 😐
Candidate : M P. Sir.
Officer : huh..What Is It Now ??
Candidate : My Performance Sir.
Officer : M P. da
Candidate : 😳 What Is That Sir. ....??
Officer : Moodittu Poda ..😡
Candidate: M P. Sir.
Officer : 😯Now What Is Thissss ????
Candidate: My Pleasure Sir.
😝 😆 😆 😝 😂 😂 😝 😆 😆 😝 😂

Monday 14 November 2016

லாட்டரி சீட்டு..

பாட்டி : எத்தனை
நாளாடா இந்த பழக்கம்?

பேரன் : எந்த பழக்கம்?

பாட்டி - லாட்டரி சீட் வாங்குறது

பேரன் : அது தமிழ்நாட்டிலேயே இல்லையே

பாட்டி - பொய் சொல்லாதே இப்போ தான் சட்டை பையிலே இருந்த ரோஸ் கலர் லாட்டரி சீட்டை கிழித்து போட்டேன்

பேரன் : ஐயோ கெளவி அது ரெண்டாயிரம் ரூவா நோட்டு

Sunday 13 November 2016

மகிழ்ச்சி என்பது.....


----------------------------------
ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.
ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள், அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."
கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்.
அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்ல சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.
பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..
" என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல.யாரிடமும் சிரிக்க முடியவில்ல். என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது.
கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்.
நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் என்னை சந்தோஷிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.
அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன்.
இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி அவர்தம் மகிழ நானும் பெரு மகிழ்வுற்றேன்.
இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.
மகிழ்ச்சி என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்."
இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயம் அவளிடம் இல்லை.
வாழ்க்கையின் அழகு என்பது
நீ
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்
என்பதில் இல்லை...
உன்னால் அடுத்தவர்
எவ்வளவு மகிழ்ச்சி ஆகின்றார்க்ள்
என்பதிலேயே இருக்கிறது...
மகிழ்ச்சி என்பது
போய் சேரும் இடம் அல்ல
அது
ஒரு பயணம்...
மகிழ்ச்சி என்பது
எதிர்காலம் இல்லை
அது நிகழ்காலம்...
மகிழ்ச்சி என்பது
ஏற்றுக்கொள்வது அல்ல
அது
ஒரு முடிவு...
நீ என்ன வைத்திருக்கிறாய்
என்பதில் இல்லை
மகிழ்ச்சி...
நீ
யார் என்பதில் தான் மகிழ்ச்சி !!!
" மகிழ வைத்து மகிழுங்கள்..
உலகமும் இறையும் உன்னை கண்டு மகிழும்"
😀😀😀

Saturday 12 November 2016

புத்தி சாலி மாணவன்

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்..
முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்
அவன் அனைத்து கேள்விகளுக்கும்..
சரியாக பதிலளித்திருப்ப
தாகவே நம்பினான்..!
சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன்
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..
வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான்
கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!
🔵கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்
உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!
🔵கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..
பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட
்டது..?
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!
🔵கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..
வாழை மரங்கள் எதற்காக
கட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல்
இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!
🔵கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய
காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!
🔵கேள்வி;- இரவு- பகல்..
எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..
மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..
உதிப்பதாலும் இரவு- பகல்
ஏற்படுகிறது..!
🔵கேள்வி;- மகாத்மா காந்தி..
எப்போது பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!
🔵கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதா..?
பதில்;- இல்லை.. திருமணங்கள்
செய்யும் அவரவர் வீட்டில்..!
🔵கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்
கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
கொத்தனார்களால் கட்டப்பட்டது..!
🔵கேள்வி;- 8மாம்பழங்களை.. 6
பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!
பயபுள்ள சரியாக
தானே சொல்லிருக்கான்..???

Friday 11 November 2016

மார்க் ஸுக்கர் பெர்க்கு....

Mark Zuckerberg-க்கு ஒரு திறந்த மடல்,

ஏலே யெய்யா மார்க்கு, நல்லாருக்கியா? அதுசரி, நீ நல்லா இல்லாம வேற யாரு நல்லாயிருப்பா? நீ எந்த நேரத்துல எலவு இந்த பேஸ்புக்கை ஆரம்பிச்சியோ, அப்பத்துல இருந்து பிரச்சனை மேல பிரச்சனை. ஹிலாரி கிளிண்டன்ல இருந்து கீர்த்தி சுரேஷ் வரைக்கும் யாரையும் விட்டு வைக்க மாட்றாய்ங்க. புரோட்டா வாங்கி குடுத்து பொறனி கேட்குற மாதிரி அம்பானி ஆளுக்கொரு ஜியோ சிம் குடுத்து அடிச்சுக்கிட்டு சாவுங்கடானு சொல்லீட்டு போயிட்டாரு. சிவகார்த்தி அழுதா இவிங்களுக்கு என்ன? என்னம்மோ இவிங்களுக்கு அவரு கால்சீட் குடுத்த மாதிரி ஆளாளுக்கு கிடந்து கதறுறாய்ங்க. தமிழக முதல்வர் அம்மா.... சரி வேணாம், உளவுத்துறை டிரேஸ் பண்ணும். இதுல மகிழ்ச்சி என்னன்னா, அம்மஞ்சல்லிக்கு தேறாதவன்னு சொந்த வீட்டுலயே தண்ணி தொளிச்சு விட்ட எங்கள உளவுத்துறை கண்காணிக்கிறது எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா மார்க்கு?  

ஊருல மழை தண்ணி இல்ல. ஆனா எல்லாரு கையிலையும் 4ஜி போன் இருக்கு. காவிரி இருந்து தண்ணி வரலைனா கூட கோவம் வர மாட்டுது. ஆனா 4ஜில நெட் ஸ்பீடு கொறஞ்சா நரம்பு புடைச்சு கோபம் தலைக்கேறுது. முன்ன மாதிரி சொந்தகாரன் எவன் வீட்டுக்கு போறதில்லை. அதுக்கு பதிலா சொந்தக்கார பயலுகளுக்கு ஃபிரண்டு ரெக்வஸ்டு கொடுத்து ப்ரண்டாக்கிட்டேன். ப்ரண்டுங்குற வார்த்தைக்காவது இனி அவிங்க உண்மையா இருப்பாய்ங்களானு பாப்போம்.

திருட்டு டிவிடில படம் பாத்துட்டு நாங்க எழுதுற விமர்சனத்துல தமிழ் சினிமாவே பயந்து போய் கெடக்கு. முன்னாடியெல்லாம் வானத்துல ஹெலிகாப்டர் பறந்தா குடிக்கிற கஞ்சியை தட்டி விட்டுட்டு வௌிய வந்து வானத்தை பார்த்த தான் வயிறே நிறையும். இப்ப வானத்துல காக்கா பறந்தாலும் அண்டை நாட்டு சதினு ஒரு ஸ்டேடஸ் போட்டா தான் மனசே நிறையுது.

 தெருவுல கஞ்சா குடிச்ச பயலுக எல்லாம் இங்க போராளியா மாறி போய்ட்டாய்ங்க! வெறச்சுக்கிட்டு திரிஞ்ச அரசியல்வாதிங்க இங்க காமெடியனா நாறிட்டாய்ங்க. கொலை செஞ்சத கூட செல்பியா போட்டு லைக் அல்றாய்ங்க! கமெண்டுல அடுத்த கொலை எப்பனு சொல்றாய்ங்க.

அனேகமா இன்னும் பத்து வருஷத்துல இங்க திரியிற கொள்ளப்பயலுக ஜெயில்ல தான் இருபாய்ங்க. அனேகமா ஜாமீன் எடுக்க நீ தான் வரணும். ஏன்னா நீ எங்க பணத்தை மட்டும் திங்கல, நேரத்தையும் சேத்து முழுங்கிருக்க!

-இப்படிக்கு உன் முகநூலால் அப்பாவித்தனத்தை தொலைத்து விட்டு சூதுவாதோடு திரியும் தமிழன்!

Wednesday 9 November 2016

லைஃப் வித் மொபைல்..

_*Life with mobile*_
தினமும் செய்ய வேண்டியவை
1) சோகத்தை ~ *Delete* செய்யுங்க
2) சந்தோஷத்தை ~ *save* செய்யுங்க
3) சொந்தங்களை~ *recharge* செய்யுங்க
4) நட்புகளை ~ *Download* செய்யுங்க
5) எதிரிகளை ~ *Erase* செய்யுங்க
6) உண்மையை ~ *Broadcast* செய்யுங்க
7) துக்கத்தை ~ *switch off* செய்யுங்க
8) வேதனையை ~ *Not reachable* செய்யுங்க
9) பாசத்தை ~ *In coming* செய்யுங்க
10) வெறுப்பை ~ *out going* செய்யுங்க
11) சிரிப்பை ~ *In box* ல் வெய்யுங்க
12) அழுகையை ~ *out box* ல் வெய்யுங்க
13) கோபத்தை ~ *Hold* செய்யுங்க
14) இன்முகத்தை ~ *send* செய்யுங்க
15) உதவியை ~ *ok* செய்யுங்க
16) இதயத்தை ~ *vibrate* செய்யுங்க
பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் *Ring tone* சந்தோஷமாக ஒலிக்கும்
*Have a relaxing day everyday*

Tuesday 8 November 2016

இண்டியன்டா....



🏥அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார்.

👨‍👩‍👧👨‍👨‍👦‍👦👩‍👩‍👧‍👦கஸ்டமர்களை கவர்ந்திழுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

💰அதில் நோயாளிக்கு நோய் குணமானால் ரூ 300 வசூல் செய்யப்படும்.

💰நோய் தீரவில்லை என்றால் ரூ.1000 தரப்படும் என அறிவித்தார்.

🤔இவரை எப்படியாவது கவிழ்க்க திட்டமிட்ட ஒரு அமெரிக்கர் இந்திய டாக்டரை அணுகினார்.

🤓அமெரிக்கர் :
'சார்... எனது நாக்கால் சுவையை அறிய முடியவில்லை என்றார்.

👷உடனே டாக்டர் : 'ஏம்மா நர்ஸ்....அந்ந 22ம் நம்பர் பாட்டிலை எடுத்து, இவர் வாயில் ஊத்து' என்றார்.

👰நர்ஸ் அந்த பாட்டிலில் இருந்து மருந்தை அமெரிக்கரின் வாயில் ஊற்றினார்.

🤓உடனே பதறிய அமெரிக்கர், 'அய்யய்யோ.....இது சிறுநீராச்சே' என்றார்.

👷டாக்டர் :
'அப்படினா உங்க நாக்கு சுவையை உணர்கிறது. மேட்டர் ஓகே.

💰எடுங்க ரூ.300 ஐ' என்றார்.
ஏமாந்துட்டோமோ என்ற கோபத்தில் விட்டதை பிடிக்க , 2 வாரம் கழித்து மீண்டும் டாக்டரிடம் வந்தார் அமெரிக்கர்.

🤓அமெரிக்கர் : 'எனக்கு ஞாபக மறதி அதிகமாயிருச்சு . இதை சரி செய்யுங்க டாக்டர்'.

👷டாக்டர் :
நர்ஸ்.... அந்த 22 ம் நம்பர் பாட்டிலை எடுங்க.

🤓அமெரிக்கர் (பதறிப்போய்) :
டாக்டர் அது சிறுநீர் என்றார்.

👷டாக்டர் :
அப்போ உங்களுக்கு ஞாபகம் அதிகமாயிருக்கிறது,ரூ.300ஐ வச்சுட்டு கிளம்புங்க என்றார்.

🤓அமெரிக்கர்: இந்தியர்களை எப்பொழுதுமே ஏமாற்ற முடியாது என்று புலம்பிக்கொண்டேசென்றுவிட்டார்..
😜😜😜😜😜



Monday 7 November 2016

பொறுப்பில்லாத நாய்..


ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது



Sunday 6 November 2016

தன்னம்பிக்கை2


கட்டத்தில் கை, கால்கள் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. இனி நம்மால் முடியாது. செத்து போய் விடுவோமோ என்று தோன்றியது.

‘செத்து போவதுக்காகவா பிறந்தாய். வாழ்க்கைனாலே பிரச்சனைகள் நிறஞ்சது தான். அதுக்கு பயந்தா வாழ முடியாது. அதனால துணிச்சலோடு போராடு’ என்று சொன்னது உள்மனசு.

கட்டெறும்பு துணிச்சலோடு போரட தொடங்கியது. சிறிது நேரம் கழித்து காற்று அடிக்க மரத்திலிந்து ஒரு இலை கட்டெறும்பு பக்கதில் விழுந்தது. உடனே கட்டெறும்பு இலையில் ஏறி அமர்ந்து அதை படகாக பயன்படுத்தி கரையேறியது.

இதை பார்த்த குளத்தில் இருந்த மீன் கட்டெறும்பை பார்த்து சொன்னது
‘நீ துணிச்சலோடு விடாமல் போரடினாய் அதனால் வென்றாய். வாழத்துக்கள் நண்பா’.

நண்பர்களை.
பயந்து வாழாமல் துணிச்சலோடு போராடினால் வெல்லலாம் என்பதை இந்த கதை உணர்த்திகிறது




Friday 4 November 2016

தன்னம்பிக்கை1


தன்னம்பிக்கை.

ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன. இரை தேட போகும் போது இருவரும் ஒன்றாகவே செல்வார்கள்.

செவ்வெறும்புக்கு உணவு கிடைக்காத நாளில் கட்டெறும்பு தனக்கு கிடைத்த உணவை கொடுத்து உதவும். அது போலவே பதிலுக்கு செவ்வெறும்பும் கட்டெறும்புக்கு உதவும்.

ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இ;ருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன.

இரண்டு எறும்புகளும் பசியாக இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடிரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்;தழிக்க ஆரம்பித்தன.
‘ நண்பா இப்படி வந்து தண்ணீல விழந்துட்டோமே. இப்ப என்ன பண்றது’ என்றது செவ்வெறும்பு.

‘நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும். அது வர நீந்திட்டே இருப்போம்’ என்றது கட்டெறும்பு.

நேரமாகி கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின.
‘நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்க தான் போகிறேன்;’ என்றது செவ்வெறும்பு.

‘இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு.

‘இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நான் சாக தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது’ செவ்வெறும்பு.

எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு. ஒரு கட்டத்தில



சந்தேகம்



🤔🙄ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டானாம்... ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’
‘‘அப்புறம் சொல்றேன்’’னு சமாளித்து நகர்ந்த சார், டிக்ஷனரியில் தேடித் தேடி ஓய்ந்து போனார். அடுத்தடுத்த நாட்களில் அவனைக் கண்டால் காணாதது போல இருந்தார். இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் துளைத்து எடுத்தான். ஒருநாள் வேறு வழியின்றி அவனிடம், ‘‘சரி! ஸ்பெல்லிங் சொல்லு’’ என்றார். அவன் ‘N A T U R E’ என்று சொல்ல, கடுப்பான வாத்தியார், ‘‘ஏன்டா! ‘நேச்சர்’னு சொல்லாமல் என்ன சாவடிச்சியா நீ? உன்னை ஸ்கூலை விட்டே அனுப்புறேன் இரு’’னு கத்தினார்.

உடனே அவன் வாத்தியார் காலில் விழுந்து அழுதான். ‘‘சார்! அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க... என் ‘புடுரே’ (future) வீணாயிடும்!’’😜


Wednesday 2 November 2016

வாய் கொடுக்க கூடாது..

மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்ககூடாது".

ஓட்டலில் சாப்பிட சென்றவரின் நிலைமையை பாருங்க

SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?

CUSTOMER : தோசை வேணும்.

SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா?

CUSTOMER : வெங்காய தோசை.

SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?

CUSTOMER : சின்ன வெங்காயம்.

SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?

CUSTOMER : நாட்டு வெங்காயம்.

SERVER : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?

CUSTOMER : சின்னதா நறுக்குனது.

SERVER : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?

CUSTOMER : அதிகமா.

SERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா?

CUSTOMER : அறுத்துட்டே போடு.

SERVER : சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா?

CUSTOMER : சிவப்பு.

SERVER : நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா?

CUSTOMER : அதிகமா உள்ளது.

SERVER : உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா?

CUSTOMER : உரம் போடாதது.

SERVER : வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா?

CUSTOMER : கழுவிட்டு போடு.

SERVER : வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா?

CUSTOMER : நல்லா வேகணும்.

SERVER : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா? நெய் ஊத்தவா?

CUSTOMER : நெய்.

SERVER : சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா?

CUSTOMER : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.

SERVER : சரி சார். இருங்க கொண்டு வாறேன்.

(சாப்பிட்ட பிறகு)

SERVER : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.

CUSTOMER : கேஷா வேணுமா? செக்கா வேணுமா?

SERVER : கேஷ்

CUSTOMER : சில்லரையா தரவா? நோட்டா தரவா?

SERVER : நோட்டா தாங்க.

CUSTOMER : பழைய நோட்டா? புதிய நோட்டா?

SERVER : புதியது.

CUSTOMER : காந்தி படம் போட்டது? போடாததா?

SERVER : காந்தி படம் போட்டது.

CUSTOMER : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? கண்ணாடி போடாததா?

SERVER : கண்ணாடி போட்டது.

CUSTOMER : சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா?

SERVER : சாதா கண்ணாடி.

CUSTOMER : கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா?

SERVER : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மன்னிச்சிடுங்க. உங்ககிட்ட தெரியாம வாய கொடுத்துட்டேன். நீங்க போங்க சார். நானே உங்க பில்ல கட்டிக்கிறேன்.

CUSTOMER : அது...மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்ககூடாது.

கலர் போகிறது




ஒரு நாள், காதர் பாயின் இடது கால் நீல
நிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில்
உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு
சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை
கேட்டார். பரிசோதனை செய்து விட்டு
காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை
அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி
அடைந்த காதர் பாய் தயக்கத்துடன் வேறு
வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக்
கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது
காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே
மருத்துவமனைக்கு சென்றார். வலது
காலிலும் விஷம் ஏறி விட்டது என்று
சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும்
என மருத்துவர் சொல்லி விட, நொந்து போன
காதர் பாய் அதற்கும் ஒத்துக் கொண்டார். இரு
கால்களையும் இழந்து, கட்டை கால்களுடன்
நடமாட ஆரம்பித்த பாய்-க்கு சில
நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.
கட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட,
பதற்றத்துடன் மருத்துவரை அணுக,
மருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம்
எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும்
ஆரம்பத்தில் இருந்து அனைத்து வகையான
உடல் பரிசோதனைகளையும் முடித்த பின்
மருத்துவர் சொன்னார், "காதர் பாய், உங்கள்
லுங்கி சாயம் போகிறது, மன்னித்து
விடுங்கள்"..

இதுதான் இன்றய *மருத்துவர்களின் நிலை.. சிரிப்பதற்கல்ல...*

*சிந்திக்க...*