Followers

Followers

Thursday 12 January 2017

கடவுள்...



கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது..

ஒரு நன்பர் நேரில் பார்த்த உண்மை சம்பவம்..!

ஒரு ஊரில் உள்ள சிறிய உணவகத்தில்..பள்ளி சீருடை அனிந்த
ஆறு வயது மதிக்கத்தக்க சின்ன பெண்(கையில் தூக்கு வாளியுடன்):

பெண் குழந்தை :-
பாட்டி ...! அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க...
காசு நாளைக்கு தராங்களாம்...!

ஹோட்டல் நடத்தும் பாட்டி : -
ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லும்மா..இதில உனக்கு... தம்பிக்கு..உன் அம்மாவுக்கு..
எல்லோருக்கும் சேர்த்து '15 இட்லி வச்சிருக்கேன்
தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....

(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).

குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் பாட்டி .... (குழந்தை கிளம்பிவிட்டாள்)

அந்த கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம் ஆதலால் அந்த
நனபர் மனதில் நினைத்ததை அந்த பாட்டியிடம் கேட்டார்...!

நன்பர் :
நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க பாட்டி ....!

பாட்டி :
அட சாப்பாடுதானே பா ....நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல பா ...அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்....எல்லாருக்கும் பணம் சுலப-மாவா சம்பாதிக்க முடியுது....

நான்: ஏன் பாட்டி அவங்க வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல..!

பாட்டி :
குழந்தை கேட்டிருக்கும்.. அதான் சார் அனுப்பி இருக்காங்க...
அவங்க கணவர் 'பக்கவாதம் வந்து வேலைக்கு போகமல் வீட்லதான்
இருக்காரு..! இவங்க அம்மாதான் கூலி வேலைக்கு போவும்.சில நேரம்
சாலை ஓரத்தில காய்-கரி வியாபாரம் செய்து கணவர் மற்றும் இரணடு
பிள்ளைகளை காப்பாற்றுது..!.
நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பலப் பா ... நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...வந்துடும் பா ...ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்டுதுல்ல அதுதான் பா முக்கியம்....!

'கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது..
இடலி பாட்டிதான் இந்த ஏழைகளின் கடவுள்...

இதை படிப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இது போன்றவர்களை வாழ்கையில் கடக்க நேரிட்டால் உங்களால் ஆன உதவியை செய்து விட்டு வாருங்கள். சிறிய உதவி என்று எதுவுமே இல்லை. சரியான நேரத்தில் செய்யப்படும் எந்த உதவியும் ஞாலத்தினும் மானப் பெரிது !!



பாட்டி உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை..
மாமனிதநேயமுள்ள உங்களை..உங்கள் பாதம் தொட்டு
வணங்குகிறேன்....!

நட்புடன் உங்கள் நண்பன் .



3 comments:

  1. அருமையான நிகழ்வு. கேட்க மனதுக்கு மிகவும் இதமாகவும் உள்ளது.

    //இது போன்றவர்களை வாழ்கையில் கடக்க நேரிட்டால் உங்களால் ஆன உதவியை செய்து விட்டு வாருங்கள். சிறிய உதவி என்று எதுவுமே இல்லை. சரியான நேரத்தில் செய்யப்படும் எந்த உதவியும் ஞாலத்தினும் மானப் பெரிது !!//

    சிறியதோ பெரியதோ Timely Help என்பதுதான் மிகச் சிறந்ததாகும்.

    மாமனிதநேயமுள்ள அந்தப்பாட்டியை நானும் உங்களுடன் சேர்ந்து பாதம் தொட்டு வணங்குகிறேன்.
    வணங்குகிறேன்....!

    ReplyDelete