Followers

Followers

Tuesday 10 January 2017

குதிரைக்காரன்



🎅 பெரிய குரு இருந்தார்.

🚫 முற்றும் துறந்தவர்.

✅ எல்லாம் கற்றவர்.

📢 அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க.

🔣 பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.

🏇 அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான்.

☔ அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை.

🔇 கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.

🎅 குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.

🎤 பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம்.

👳 இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.

☝ ‘என்னப்பா பண்ண லாம்?’ னு கேட்டார்.

🙏 ‘அய்யா! நான் குதிரைக் காரன் 🏇

❗எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க 😒

👌 ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க.

🐎 நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.

🌾 புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க ❗

👮 நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’ னான்.

👋 பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு.

🏇 அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு,
அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.
🔣 தத்துவம்,
🔠 மந்திரம்,
🚫 பாவம்,
✅ புண்ணியம்,
🌁 சொர்க்கம்,
🔥 நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு.

🎤 பிரசங்கம் முடிஞ்சுது.

✴ ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.

🙏 ‘அய்யா… நான் குதிரைக்காரன்.
😳 எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க.
👌 ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க…

🌾 நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு 🐎 குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன்.
🔢 முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான் 😨

😱 அவ்ளோதான்❗
😰 குரு தெறிச்சிட்டார்!

© நீதி:
✊ மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும் ✅

👼 புரியாத,
😇 தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் .........😂😂😂




3 comments:

  1. இது ஒரு அருமையான நீதிக்கதை. ஏற்கனவே நான் படித்ததும் அறிந்ததும்கூட.

    இருப்பினும் மீண்டும் படிக்க அருமையோ அருமைதான்.

    இங்கு அந்தக் குதிரைக்காரனே, அந்த குருவுக்கும் குருவாகக் காட்சியளிக்கிறார் என்பது என் கருத்து. :)

    ReplyDelete
  2. அருமை...

    ஆணவம் அழிந்தது...

    ReplyDelete