Followers

Followers

Sunday 8 January 2017

பூனக்குட்டி..


படித்ததில் பிடித்தது




நண்பனுடன்
அவனது வீட்டிற்குச்
சென்றிருந்தேன்..
வாசலில்
அவனது பாட்டி
கயிற்றுக் கட்டிலில்
கிடந்தார்..

நண்பன் உள்ளே
போய்விட்டான்..
நான் : என்ன பாட்டி
நல்லா
இருக்கிங்களா..?

பாட்டி : நல்லாருக்கேன்
ராசா.. நீ ராசா..?

நான் : நல்லாருக்கேன்
பாட்டி..

இடையே எனது Android
தொலைபேசி அழைத்தது..
பேசி முடித்தேன்..

பாட்டி : என்னாய்யா அது
டிவி பொட்டி கணக்கா..?

நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்க
ஃபோனு..
சட்டென்று ஞாபகம்
வந்தவனாய்
அதிலிருந்த Talking Tom-ஐ
எடுத்துக் காட்டினேன்..

பாட்டி: இதுகிட்ட
பேசினா
அத அப்புடியே திரும்ப
பேசும்..

பாட்டி : என்ன
ராசா சொல்றே..?

Talking Tom :என்ன
ராசா சொல்றே..?

நானும், பாட்டியும், Talking
Tomமும் சிரித்தோம்..

பிறகு வீட்டினுள்
சென்றேன்..

எல்லோருடன்
பேசிவிட்டு வெளியில்
வந்தேன்...

வாசலில் பாட்டி..

நான் : போயிட்டு வாரேன்
பாட்டி..

பாட்டி : ராசா...

நான் : என்னா பாட்டி..?

பாட்டி : ஏய்யா..
அந்தபூனகுட்டிய
இங்க உட்டுட்டு போயா..

நான் : என்ன
பாட்டி சொல்றிங்க..?

பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல
இங்க
எங்கிட்ட யாருமே பேச
மாட்றாங்கயா..
நா செத்துபோறப்ப
அந்த
பூனகுட்டிகிட்டயாச்சும்
பேசிட்டே சாவுறேன்யா..

நண்பனைப் பார்த்தேன்..

யாருடனோ (!)
ரகசியமாய்ப்
பேசிக்கொண்டு
இருந்தான்..

நா சாப்ட்டேன் செல்லம்..
நீ செல்லம்..?
Ok செல்லம்....
நா வீட்ல இருக்கேன்
செல்லம்....
அப்புறமா பேசுறேன்
செல்லம்..
???????????



3 comments:


  1. படித்ததில் பிடித்த பூனக்குட்டி.. நல்லா இருக்குது.
    பேசக்கூட ஆள் இல்லாத வயதானவர்கள் பாடு கஷ்டம்தான்.

    இதையேதான் என் ’வடிகால்’ என்ற நகைச்சுவைச் சிறுகதையிலும் எழுதியுள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22.html

    ReplyDelete